ஞாயிறு, 8 மே, 2022

ஜிப்மர் - இனி ஹிந்தி மட்டுமே!" ஆங்கிலத்திற்கு நோ சொன்ன புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர்! ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனை

  Vigneshkumar  -   Oneindia Tamil   :  சென்னை: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை எனப்படும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
புதுச்சேரியில் இந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

 இணையத்தில் விமர்சனம்

 பொதுவாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவலர் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படும்.


இதனிடையே அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார். அதாவது மத்திய அரசு அலுவலகங்களின் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இனி வரும் காலத்தில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார். அதாவது மத்திய அரசு அலுவலகங்களின் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இனி வரும் காலத்தில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவை இணையத்தில் பலரும் சாடி வருகின்றனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையில் முயற்சி தான் இது என்றும் இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே இந்தி மொழி குறித்த சர்ச்சை கிளம்பி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது.

மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்," என்று கூறி இருந்தார்,

என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டில் இருந்தும் பலரும் குரல் கொடுத்தனர். இந்தச் சூழலில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியைக் கட்டாயமாக்கும் வகையிலான இந்த உத்தரவு பரபரப்பைக் கிளப்பி உள்ளது. புதுச்சேரியில் இப்போது என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி ட்வீட்
இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியும் ஆன கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாகக் கனிமொழி தனது ட்விட்டரில், "ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: