வெள்ளி, 1 அக்டோபர், 2021

ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க ஒப்புதல்.. Tata Sons Win Air India Bid

பிந்திய செய்தி . டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியது உறுதியானது

 .hindutamil.in : ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.
கோவிட் தொற்று சூழலுக்கு பின்பு கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.


இதற்கு செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.

மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானவை. மத்திய அரசு முடிவெடுக்கும்போது ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்’’ எனக் கூறினார்

கருத்துகள் இல்லை: