tamil.samayam.com : முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
அவர் இன்று (அக்டோபர் 2) தனது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் , மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
Jeyalakshmi C - Oneindia Tamil : சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து.
திமுகவின் மூத்த முன்னோடியான வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் தான் ராஜா. வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை சேலம் மாவட்டத்தில் பரபரப்பாக செயல்பட்டு வந்தார்.
கட்சிக்காக தடாலடி காரியங்களில் இறங்கக் கூடியவர் வீரபாண்டி ஆறுமுகம். இவரை சேலத்து சிங்கம் என்றும், வீரபாண்டியார் என்றும் தான் அடைமொழிகளில் திமுக நிர்வாகிகள் அழைத்தார்கள். துணிச்சல் மிக்கவர் ஆறுமுகம் என கருணாநிதியிடம் பெயரெடுத்தவர்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக செயல்பட்டவர் அவரது மூத்த மகன் செழியன். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் திடீரென காலமானதை அடுத்து அவரது இடத்திற்கு வந்தார் இரண்டாவது மகன் வீரபாண்டி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக