புதன், 28 அக்டோபர், 2020

இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- பிரான்ஸ் அறிவுறுத்தல்

  thinathanthi : பாரிஸ், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      இந்தத் தாக்குதலை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 

சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் கடுமையான போராட்டங்கள் பிரான்ஸ்க்கு எதிராக நடந்து வருகின்றன. பிரான்ஸ்க்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்துள்ள சூழலில், இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும் என பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது. 

 

இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், “ இந்தோனேசியா, வங்காளதேசம், ஈராக் மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான மூரித்தானியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணங்கள் மேற்கொள்ளும் போது குறிப்பாக சுற்றுலாவாசிகள் அதிகம் செல்லும் இடங்களுக்கு செல்லும் போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: