ஞாயிறு, 25 அக்டோபர், 2020

ஹத்ராஸ் விசாரணை நடத்திய அதிகாரியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை

sathiyam. : உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குழுவில் இடம்பிடித்த அதிகாரியின் மனைவி, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஹத்ராஸ் சம்பவத்தை விசாரித்த சிறப்பு அதிகாரியின் மனைவி, தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: