சனி, 31 அக்டோபர், 2020

பிளாஸ்டிக் கழிவில் இருந்து திட எரிபொருள்

BBC /:  பரமக்குடி அருகே உள்ள பனிதவயல் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அன்பரசன். இவர் நீட்ஸ் (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்) மூலம் அரசின் மானியக் கடனுதவி பெற்று பிளாஸ்டிக் கழிவில் இருந்து சுற்றுப்புறத்துக்கு உகந்த திட எரிபொருள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த திட எரிபொருள் தொழிற்சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த எரிபொருள், நிலக்கரியை விட அதிக நேரம் நின்று எரியக் கூடியது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கிறது. இதனால் தற்போது வரை சுமார் 25 டன் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: