இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெண்களை இழிவுபடுத்தும் ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் வெளியில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.
பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பெண்களை தவறாக பேசியவர்களை வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு எங்களுடைய தாய்மார்கள் தக்க நேரத்தில் தக்க விதத்தில் சரியான கவனிப்பு கவனிக்க காத்திருக்கிறார்கள். நீங்கள் எங்கு சென்றாலும் தமிழக சகோதரிகள் உங்களுக்கு சிறப்பான ஒரு வரவேற்பை அவர்களுடைய பாணியில் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். நீங்கள் வெளியே செல்ல முடியாது. வெளியில் நடமாட முடியாது.” என்று கூறினார்.
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெளியில் நடமாட முடியாது” என்று பாஜக தலைவர் எல்.முருகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்.முருகன் பேச்சுக்கு திமுகவினர் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து பேசிய திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் திமுக தொண்டர்கள் போஸ்டர் கிழிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக