வெள்ளி, 30 அக்டோபர், 2020

தமிழகம் மீட்போம் ! உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகிறது! ஒதுங்கியது போதும்!

Kandasamy Mariyappan : · Reservation நாட்டின் வளர்ச்சியை தடுத்து விட்டது! Reservation ஒரு சிலருக்கு மட்டுமே! எனவே Reservation பற்றி பேசுவது வீண்!

இப்படி பலரின் மனதில் இருப்பது வருத்தமாக இருக்கிறது! இதன் வெளிப்பாடுதான் EWS 10% கொடுத்த பொழுதும், OBC 27% கொடுக்காத பொழுதும், MBBS சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% கொடுக்க மறுத்து பொழுதும் எந்த ஒரு கோபமும் நம்மிடம் இல்லை!
மத்திய அரசு பணிகள் மற்ற மாநிலத்தவர்கள் எடுத்துக் கொண்ட பொழுது....
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
IAS/IPS/IFS தேர்வில் குறிப்பிட்ட Coaching centreகளில் பயில்பவர்களே குறிப்பாக வடக்கத்தியர்களே தேர்ச்சி பெறும் பொழுது......
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
NEET, JEE தேர்வில் குறிப்பிட்ட Coaching centreகளில் பயில்பவர்களே குறிப்பாக வடக்கத்தியர்களே தேர்ச்சி பெறும் பொழுது......
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
எனது மாநிலத்தில் உள்ள MBBS இடங்கள் மற்றவர்களுக்கு செல்கிறதே....
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
தமிழ்நாட்டு அரசு பணிகள் மற்ற மாநிலத்தவர்களுக்கு செல்கிறதே...
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
கூடங்குளம் அணு உலை வெடித்தால் அந்த பகுதியே அழிந்து விடுமே...
நான் அங்கே இல்லை, நான் ஏன் பேசனும்!
காவிரிப் படுகையை பாலைவனமாக மாற்றப் போகின்றனரே...
எனக்கு நிலம் கிடையாது, நான் ஏன் பேசனும்!
முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை முன்பு இருந்தது போன்று 152 அடியாக உயர்த்த மறுக்கிறார்களே.....
எனக்கு அதனால் பலன் கிடையாது, நான் ஏன் பேசனும்!
காவிரி நீரை தர மறுக்கிறார்களே....
எனக்கு அதனால் பலன் கிடையாது, நான் ஏன் பேசனும்!
சென்னை, வெள்ளத்தில் மிதக்கிறதே.....
நான் சென்னையில் இல்லை, நான் ஏன் பேசனும்!
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அநீதி நடைபெறும் பொழுது......
நான் உயர்ந்த சாதி, நான் ஏன் பேசனும்!
ஒன்றிய அரசு OBCக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறதே.....
ஒன்றிய அரசு SC/STக்கு 22.5% வழங்குகிறது, நாங்கள் ஏன் பேசனும்!
இதுதான் கொள்ளையர்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் கிடைத்த வெற்றி!!!!!
சிந்தித்து பாருங்கள், மேலே சொன்ன ஓரிடத்தில் எங்கேயாவது நாம் இருப்போம், ஆனால் நமக்கு சம்மந்தம் இல்லாதது போன்று ஒதுங்குவதால் நமது உரிமைகளை இழந்து கொண்டே வருகிறோம்!
நமது அன்றாட தேவைகளை நோக்கி ஓடுவதால் எல்லாவற்றையும் நாம் பேசவோ, எல்லாவற்றுக்கும் போராடவோ முடியாதுதான்!
அதற்காகத்தான் நமக்கான அரசியல் இயக்கத்தை பாதுகாக்க வேண்டும்,
அந்த இயக்கத்தை ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.
அந்த இயக்கத்தில் சில குறைகள் இருக்கலாம், அதற்காக அந்த இயக்கத்தை ஒதுக்கினால் ஆபத்து நமக்குதான்.
RSS/BJPயில் அவ்வளவு குறைகள் இருந்தும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஏன் அதனை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர்!!!!! என்று உணர்ந்தால்........
திராவிட இயக்கம்...
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்று புரியும்.  உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகிறது

கருத்துகள் இல்லை: