nakkeeran :விருத்தாசலம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கலப்பட டீ தூள் பயன்பாட்டில் உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகரத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, கோவையில் இருந்து விருத்தாசலத்திற்கு பார்சல் மூலமாக, 200 கிலோ டீ தூள் மூட்டைகள் வந்திருந்தது.
அதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நல்லதம்பி தலைமையிலான குழுவினர் மடக்கிப் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். மூட்டைகளிலிருந்து டீ தூள்களை, பரிசோதனை செய்த போது கலப்பட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவற்றை பறிமுதல் செய்து, மூட்டைகள் அனுப்பியவர்கள் மற்றும் தயாரித்த நிறுவனங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக