திங்கள், 16 செப்டம்பர், 2019

சவூதி தாக்குதல்கள் .. இந்திய பொருளாதாரத்தின் மீது விழுந்த .. .மேலுமொரு அடி?


Karthikeyan Fastura : சவூதி ஆராம்கோவின் ஆயில் பீல்டில் நடத்திய ட்ரோன்ஸ் தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு 5 Million பேரல் உற்பத்தியை முடக்கி போட்டிருக்கிறது. சவுதியில் ஏற்பட்ட இந்த தாக்குதல் இந்தியாவிற்கு தான் பெரும் இழப்பை கொண்டு வரும். ஏனென்றால் இந்தியா தான் இதன் முக்கிய பெரிய வாடிக்கையாளர். இன்று இதன் தாக்கம் கம்மாடிட்டி மார்கெட் வரலாற்றில் இதுவரை காணாத மாதிரி இன்று ஒரே நாளில் 11% ஏறிவிட்டு இப்போது சற்று இறங்கி 7.7%ல் இருக்கிறது.
இதுவரை பெட்ரோல் டீசல் விலையை ஏற்றாத பெட்ரோல் நிறுவனங்கள் இம்முறை அப்படி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படி ஏற்றினால் ரூபாய் மதிப்பு இன்னும் கொஞ்சம் கீழே விழுகும் என்பதால், ஏற்கனவே முடங்கி போயுள்ள ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் இன்னும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் அரசு ஏற்ற அனுமதிக்காது. ஏற்றாவிட்டால் பெட்ரோலிய நிறுவனங்கள் பெரும் நட்டத்தை சந்திக்கும். ரிலையன்ஸ் நிறுவனமும் இதில் நட்டத்தை சந்திக்க துவங்கும்.
தேர்தல் நடைபெற்றதில் இருந்து இப்பொழுது வரை பார்கையில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கும் பிஜேபி அரசிற்கும் டெர்ம்ஸ் சரியில்லை என்றே தோன்றுகிறது.
நாட்டை பற்றியோ, மக்களை பற்றியோ கவலை இல்லாமல் தங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த இருதரப்பு வினை விதைத்தவர்கள் வினை அறுக்கிறார்கள்.
மக்களில் ஒருவனாக நடப்பதெல்லாம் நன்மைக்கு என்றே நான் கருதுகிறேன்

கருத்துகள் இல்லை: