வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஹிந்தி .. தோன்றி 200 வருடங்கள் கூட ஆகாத ஒரு மொழி

Prakash JP : ஹிந்தி எனும் மாயை - 1:
தோன்றி 200 வருடங்கள் கூட ஆகாத ஒரு மொழியை இந்தியாவில் 52 கோடி பேர் தாய்மொழியாக கொண்டுள்ளனராம். எப்படி? பார்க்கலாம்.
முதலாவதாக,
இந்திய அரசின் மொழிவாரி கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு மொழிக்கும் அதன் கிளைமொழிகளாக / வழக்குமொழிகளாக (dialect) 4/5 மொழிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் ஹிந்திக்கு மட்டும் 56+ மொழிகள் வழக்குமொழிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 56+ மொழிகளின் கூட்டு எண்ணிக்கை தான் இந்த 52 கோடி பேர்.
இன்னும் எளிமையாக சொல்வதென்றால், கிழக்கே பிஹாரில் பேசப்படும் போஜ்புரி மொழியும் மேற்கே ராஜஸ்தானில் பேசப்படும் ராஜஸ்தானி மொழியும் ஹிந்தியின் வழக்குமொழி வடிவங்களாம். அவை இரண்டும் வேறு வேறு மொழிகள் இல்லையாம். எப்படி என்றால் இரண்டுக்கும் வரிவடிவம் (Script) ஒன்றாம். (சரி அதுவாவது ஹிந்தியில் சொந்த வாரிவடிவமா என்றால் இல்லை. ஹிந்திக்கே தேவநாகரியிடம் கடன் வாங்கிய வரிவடிவம் தான் என்பது வேறு கதை)
சரி, வரிவடிவத்தை வைத்து அனைத்தும் ஒருமொழி என கொள்ளலாம் என்றால், தெலுங்கும் கன்னடமும் எப்படி இருவேறு மொழியானது இந்திய அரசியல் அமைப்பில்?

தங்கள் தகுதிக்கு ஏற்ப ஹிந்தியை பலமாக காட்டிக்கொள்ள மற்ற மொழிகளை (அவதி, மஹதி, ஹர்யான்வி, சார்ட்டிஸ்கர்ஹி போன்ற) தன்பக்கம் வளைத்துக்கொண்டது இந்திய அரசு. இப்படி கூட்டிக்காட்டப்பட்ட எண்ணிக்கைதான் இந்த 52 கோடி. மேலும் இது பலகாலமாக இழைக்கப்பட்டு வரும் பெரும் வஞ்சகம், தமிழ்மொழிக்கல்ல இன்னபிற இணைத்த மொழிகளுக்கு.!
சரி இரண்டாவதாக.,
அப்படி பார்த்தாலும் ஹிந்தி மட்டும் பேசுபவர்கள் எண்ணிக்கை 32 கோடி இருக்கிறதல்லவா? அதுவும் பெரிய எண்ணிக்கை தானே? என்றால்., இங்கே தான் இந்திய அரசின் சூட்சமம் புரிந்துகொள்ள வேண்டும்!
ராஜஸ்தானின் மக்கள்தொகை சற்றேறக்குறைய 7 கோடிபேர். ஆனால் இந்தியாவில் ராஜஸ்தானியை தாய்மொழியாக கொண்டவர்கள் 2.5 கோடிபேர் மட்டுமே. மீதம் 4.5 கோடிபேர் ஆதிகாலம் தொட்டு ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றே நம்புவோமாக.
அதேபோல் ஹர்யானாவின் மக்கள் தொகை 2.5 கோடிபேர். ஆனால் 1 கோடிபேருக்கும் குறைவானவர்கள் தான் ஹர்யான்வியை தாய்மொழியாக கொண்டவர்கள். மீதம் 1.5 கோடிபேர் ஹிந்தியின் கணக்கின் கீழ் வருவர்.
இப்படி ஒவ்வொரு கிளைமொழியின் கணக்கையும் மாநில மக்கள்தொகையோடு ஒப்பிட்டு பார்த்தால், இந்திய அரசு ஹிந்தியை எப்படி வளர்த்துள்ளது ( ) என்று புரியும்.
முடிவாக.,
இவர்கள் உருதுவையும், சமற்கிருதத்தையும் சேர்த்துக்கிளறி அதை ஹிந்துஸ்தானியாய் பொங்கி பின்னர் ஹிந்தியாய் வடித்து செய்த பொங்கச்சோறு இன்னும் நகரங்கள் கடந்து எந்த கிராமத்துக்கும் சென்று சேரவில்லை என்பதே நிதர்சனம்.
துணிவிருந்தால் இவர்கள் கூறிக்கொள்ளும் ஹிந்தியை வைத்து உபியில் உள்ள ஒரு கிராமத்தானையும் மபியில் உள்ள ஒரு கிராமத்தானையும் தங்குதடையின்றி உரையாடிக்கொள்ள சொல்லுங்கள் பார்ப்போம்.
டெல்லி ஏர்போர்ட்டில், லக்னோ ரயில்நிலையத்தில் பேசிக்கொள்ளும் ஹிந்தியை வைத்து அதை ஹிந்தி மாநிலம் என்று கூறிக்கொள்ளுபவர்கள் இவர்கள். அப்படி பார்த்தால் மஹாராஷ்டிராவையும் குஜராத்தையும் கூட ஹிந்தி மாநிலம் ஆக்கிக்கொள்ளலாம் நீங்கள்.
சட்டையை கழட்டிபோட்டுட்டு சொந்த சக்தியோட வாங்கடா மொதல்ல.., யார் பெரிய ஆளுன்னு அப்பறம் பார்த்துக்கலாம்.!
மொழிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இணைப்பு.,
http://censusindia.gov.in/2011Census/C-16_25062018_NEW.pdf
#StopHINDIImposition
-சக்திவேல் கொளஞ்சிநாதன்

கருத்துகள் இல்லை: