
இந்நிலையில் அந்த மாணவி கூறும்போது, “மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் வாக்குமூலம் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்னும் சின்மயானந்தை கைது செய்யவில்லை. அரசு நான் சாக வேண்டும் என்று காத்திருக்கிறதா? சின்மயானந்தை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன்” என்றார்.
இதற்கிடையே சின்மயானந்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சர்க்கரை அளவு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இதனால் சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக