

ம்ன்னம்பலம் : தமிழகத்தில் அனைத்துப்
பள்ளிகளிலும் காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு பதிலாக அந்த நாட்களில் காந்தியின் 150 ஆவது பிறந்தாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் பற்றி வகுப்பெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “ காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாள் விழா 2.10.2018 முதல் 2.10.2020 வரை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்பட்டு வருவதால், இதை சீரிய முறையில் செயல்படுத்திட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

சர்வ மதப் பிரார்த்தனை, தூய்மை விழிப்புணர்வு, காந்திய கதைகள் கூறுதல், காந்தியடிகள் பற்றி கலந்துரையாடுதல், காந்தியோடு தொடர்புடைய இடங்களுக்கு மாணவர்களைக் கூட்டிச் செல்லுதல், காந்திய வினாடி வினா போட்டிகள் நடத்துதல் உள்ளிட காந்தி தொடர்பான நிகழ்வுகளை மாணவர்களை மையமாக வைத்து நடத்தும்படி சுற்றறிக்கைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, “இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக இன்றுதான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுபற்றி எங்கள் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது வகுப்புகள் நடத்த விரும்பும் பள்ளிகள் நடத்தலாம், இல்லையென்றால் காலாண்டு தேர்வு விடுமுறை விடலாம் என்று பட்டும் படாமலும் சொல்கிறார்கள்.
இந்த ஒன்பது நாட்களும் காந்திய வகுப்புகளை நடத்துவது பற்றி யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் காலாண்டு தேர்வு விடைத் தாள்களை எப்போது திருத்துவது, அது தொடர்பான ரெக்கார்டு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது எப்படி என்று குழப்பமாக இருக்கிறது” என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக