வியாழன், 19 செப்டம்பர், 2019

சுயஇன்பம் ..புணர்ச்சிக்கு ஒரு டீசர்... சாதாரண பயலாஜிகள் ப்ராசஸ்.!

Dr Aravindha Raj : ~𝐈𝐒 𝐌𝐀𝐒𝐓𝐔𝐑𝐁𝐀𝐓𝐈𝐎𝐍 𝐖𝐑𝐎𝐍𝐆 ? 'சுயஇன்பம்' செய்வது தவறா??
இந்த விஷயத்தை நீங்க தயங்கியோ,இல்லை யாருகிட்ட கேக்குறது ன்னு தெரியாம கூகிள்-ல என்னென்னமோ படிச்சு நாம புரிஞ்சிகிட்ட விஷயம் சரியா தவறா அப்டின்ற ஒரு பதற்றத்துலயே இருக்கிறதால தான் இந்த பதிவு.
முதல் ல சுய இன்பம் னா என்ன ?
ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளாமல் தங்களுடைய அந்தரகங்க உறுப்பை தாங்களே கிளர்ச்சி(AROUSAL) அடைய செய்து,அதன் மூலம் தங்களது பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்துறது தான் சுயஇன்பம்.
ரெண்டாவது, இது செய்யலாமா ?  செய்யக்கூடாதா? இதெல்லாம் செஞ்சா ஏதாவது பிரச்னை வருமா? இதான் அடுத்த குழப்பம்.
முதல் ல ஆண்களுக்கு இந்த விந்தணு எப்டி உற்பத்தி ஆகுதுன்னு பாக்கலாம்.
இந்த விந்தணு உற்பத்தி ஆகுற முறைக்கு 'SPERMATOGENESIS' னு பெயர்.... இது நம்ம உடல் ல தோராயமா 72 நாட்கள் நடக்கும் ஒரு சுழற்சி இது.
நாம நினைக்குற மாதிரி எடுத்த உடனே விந்தணு உற்பத்தி ஆயிடாது..
நம்முடைய விறைப்பகுதி(TESTICLE) இருக்கு ல்ல.... அதுல வளர்ச்சி அடையாத விந்தணு (IMMATURE SPERM)உற்பத்தி ஆகும்... அது பொறுமையா EPIDIDYMIS னு சொல்லப்படுற பகுதியை அடைஞ்சு,வளர்ச்சி அடையும்... வளர்ச்சி அடைந்த விந்தணு VAS DEFERENS ன்னு ஒரு சின்ன குழாய் மூலமா EJACULATORY DUCT க்கு வரும்...
அங்க இந்த விந்தணு SEMINAL VESICLES & PROSTATE னு சொல்லப்படுற இரண்டு சுரப்பிகள் கூட கலந்து "𝗦𝗘𝗠𝗘𝗡" ஆஹ் மாறும்...
அந்த SEMEN அப்டியே URETHRA ன்னு சொல்லப்படுற இன்னொரு குழாய் வழியா உடலுறவு கொள்ளுறப்ப ஆண்குறி (PENIS) மூலமா வெளிய வரும்.
ஒரு நாளைக்கு நம்ம விறைப்பை 200-300 மில்லியன் விந்தணு-வை உற்பத்தி செய்யுது... ஒரு முறை நாம சுயஇன்பம் மூலமா 1.5ml-5ml SEMEN வெளியேற்றும் போது சுமார் 40-100 மில்லியன் விந்தணுவை வெளியேற்றுறோம்...

இந்த சுயஇன்பம் மூலமா இதனோட உற்பத்தி பாதிக்குமா ? கிடையாது.
இந்த சுயஇன்பம் மூலமா குழந்தை பிறப்புல பாதிப்பு வருமா ? கிடையாது.
இந்த சுயஇன்பம் மூலமா ஆண்குறி சிறிதாகுமா ? கிடையாது.
சுயஇன்பம் அப்டின்றது உங்களுடைய பாலியல் ஆசைகளை வடிகால்(SEXUAL OUTLET) அமைத்து உங்களுக்கு அதை ஒரு பெண்ணுடன் புணர்வதற்கு முன்பா உங்களுக்கு புணர்ச்சி இப்படித்தான் இருக்கும் ன்னு சொல்லிக்குடுக்கும் ஒரு சாதாரண பயலாஜிகிகள் ப்ராசஸ்.
நிறைய பேருக்கு இருக்க இன்னொரு சந்தேகம்... ஆண் குறி சிறிதாக அல்லது பெரிதாக இருந்தால் ஏதாவது பிரச்சனையா ன்னு தான்.... ஒரு பெண்ணுடைய பெண்ணுறுப்பு சுமார் 8-13 சென்டிமீட்டர்... அந்த அளவுக்கு ஒரு ஆணுடைய ஆண்குறி விரைப்பா இருக்கும் போது அந்த அளவு இருந்தால் போதும்... அதுக்கு மேல இருந்தாலும் சரி,இல்லைன்னாலும் சரி...ஒரு பயனும் இல்ல.... அதனால ஆணுறுப்போட அளவை நெனச்சு யாரும் துளிகூட பயப்பட வேணாம்.
டெய்லி ராத்திரி 11மணிக்கு மேல, டிவி ல...டேய் பசங்களா... வயசு கோளாறுல இதெல்லாம் பண்ணாதிங்க டா ன்னு ஒரு தாத்தாவோ இல்ல, கோட் சூட் மாட்டிக்கிட்டு ஒருத்தர் சொல்லுறத அப்டியே ஆழ்ந்து கேப்போம்; இதெல்லாம் தப்பு டா கண்ணா!! இதெல்லாம் செஞ்சா குழந்தையே பொறக்காது!!
என் கிட்ட வாங்க..! நான் நல்ல லேகியம் தரேன்..!எல்லாம் சரியா  போய்டும்ன்னு  கேட்டதும் நமக்கு வர்ற பயத்த பத்தி நான் சொல்லவா வேணும்!!!
இந்த போலி டாக்டர்கள் எல்லாருடைய முதலீடு என்னன்னா உங்களுடைய பயமும், குற்ற உணர்ச்சியும் தான்.
நம்ம படிக்கிற புத்தகமோ,இல்லை நம்ம வாழுற சமூக சூழ்நிலையோ, நம்முடைய கலாச்சாரமோ இந்த சுயஇன்பம் கொலை குற்றத்துக்கு சமம்-ன்னு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வெச்சிருக்காங்க.
அது முழுக்க முழுக்க தவறு.
எல்லா உயிரினங்களும் சுயஇன்பம் செய்யும்...நாய்,பூனை,குரங்கு,யானை,மனிதன் ன்னு எல்லா ஜீவராசிகளோட பாலியல் இச்சைக்கான(SEXUAL OUTLET FOR A SEXUAL DESIRE) வடிகால் இது தான்.
சரி,அப்போ இது செய்யுறதால ஏதாவது சிக்கல் இருக்கா-ன்னு கேட்டா!!
இருக்கு...ஒன்னே ஒன்னு இருக்கு.. அது தான் அயர்ச்சி.
இந்த விந்தணு இருக்க SEMEN ல கலோரி(ENERGY) உண்டு...நீங்க ஒரு நாளைக்கு நிறைய தடவை சுயஇன்பம் செய்யுறப்ப,இந்த கலோரிகள் வீணாகி உங்களுடைய ஆற்றல் குறைஞ்சு போகுது....அதனால,ரொம்ப சுலபமா அயர்ச்சி வந்து அது உங்களுடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்குது.
இன்னும் சிலர்,PORN ADDICTION ல இருக்காங்க...அதாவது எப்போ பாத்தாலும் மொபைல் ல அதை பாத்துட்டே இருக்கணும் ன்னு வர்ற எண்ணம்...அது தப்பு. நல்லதும் இல்லை....ஏன் னா, தொடர்ச்சியா அதை பாத்துகிட்டே இருந்தா, நிஜத்துல நம்ம துணை கூட செய்ய ஆர்வம் இருக்காது...இதுக்கு பேர் 'SEXUAL AVERSION'...நிறைய கற்பழிப்பு,குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கெல்லாம் இந்த 'PORN ADDICTION' ஒரு முக்கிய காரணம்..அதனால தயவு செஞ்சு எப்பவுமே இதை பாத்துட்டே இருக்கணும் ன்னு எண்ணம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கோங்க...இப்டி நாம நம்ம வாழ்க்கையை கொஞ்சம் நெறிபடுத்திக்கிட்டா, தேவை இல்லாம பாலியல் தொழிலார்கள் கிட்ட போய்ட்டு,நமக்கு STD ன்னு சொல்லப்படுற பால்வினை நோய்கள் வராம இருக்கும்.நம்ம சுய மற்றும் சமூக வாழ்க்கைல இது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
உங்களுக்கு இச்சை தோணுறப்ப பாருங்க...சுய இன்பம் பண்ணலாம்...துளிகூட தப்பே இல்லை.அது தான் 100% சரி.
ஆனா,டென்ஷன்-ஆ இருக்கு,கடுப்பா இருக்கு...அதனால நான் சுயஇன்பம் செய்யுறேன் ன்றது சரியான ஒரு தீர்வு இல்லை...எந்த காரணத்துனால நமக்கு கடுப்பு வருது ன்னு தெரிஞ்சு,அந்த காரணத்துக்கான தீர்வு எடுக்கிறது தான் சாமர்த்தியம்.
பெற்றோர்கள் இதை புரிஞ்சிக்கணும்...அம்மாவுக்கு தன்னோட குழந்தை குழந்தையாவே கடைசி வரைக்கும் இருந்தாலே போதும்...ஆனா,பரிணாம வளர்ச்சி அது கிடையாது....இதெல்லாம் நடக்கணும்.இது தான் அறிவியல் நிறைந்த உடற்கூறு.
அதே மாதிரி,இந்த விந்தணு நல்லா வளர என்ன செய்யலாம்...அந்த லேகியம் சாப்பிடலாமா ?? இந்த மருந்து குடிக்கலாமா ? அத்திப்பழ ஜீஸ் குடிக்கலாமா?
ஒண்ணுமே வேணாம்....கவலை இல்லாத வாழ்க்கை,நல்ல ஒரு தூக்கம்,ப்ரோடீன் நல்லா இருக்க உணவுப்பழக்கம் இருந்தால் போதும்...முக்கியமா இன்னொன்னு, இந்த விறைப்பை இருக்குல்ல..இது நம்ம உடலை விட்டு கொஞ்சம் தனியா பை மாதிரி இருக்கும்....நம்ம உடலோட நார்மல் வெப்பநிலையை (36.6°C-37.2°C) விட,விறைப்பை ல இருக்க வெப்பநிலை 2°C கம்மி(35°C)...அந்த குளிர்ந்த வெப்பநிலை ல தான் விந்தணு நல்லா வளரும்...அதனால முடிஞ்ச வரைக்கும் ரொம்ப இறுக்கமான உள்ளாடைகள் போட வேணாம்...கொஞ்சம் காத்தோட்டமா, விறைப்பை அதனோட குளிர்ந்த நிலையில இருக்க தோதான உள்ளாடைகள் போடுறது அவசியம்.
மத்தபடி ஒரு ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யலாம்...தவறில்லை.இதனால ஆண்குறி சிறிதாகும்,விந்தணு கம்மியாகிடும்,புற்றுநோய் வரும்,குழந்தையின்மை வரும் ன்னு யாராச்சு சொல்லுறத நம்பி, அதையே நெனச்சு யாராவது பயந்துட்டு இருந்தாங்க-ன்னா,தயவு செஞ்சு அவங்க கிட்ட இதை எடுத்து சொல்லுங்க.
என்னை சுத்தி இருக்க நெறைய இள வயசு பசங்களுக்கு இருக்க சந்தேகம் இது...கிட்டத்தட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் ன்னு நினைக்குறேன்...இதை பத்தி இந்த தலைமுறை டாக்டர் நான் பேசலன்னா வேற யாரும் பேச மாட்டாங்க...அதுக்கு தான் இந்த பதிவு.
நன்றி ! ❤️
Dr.Aravindha Raj.

கருத்துகள் இல்லை: