ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

டிஎஸ்பியாக தேர்வாகியுள்ள சரோஜா .. கடும் வறுமையிலும் .. 375 மதிப்பெண் பெற்று 169 வது ரேங்கில் வெற்றி

கடும் வறுமையிலும், விடா முயற்சியால் சாதனை படைத்த பெண்! - குவியும் பாராட்டுகள்!ndtv.com/tamil: கடும் வறுமையிலும், விடா முயற்சியால் சாதனை படைத்த பெண்! -
நெல்லை மாவட்டம், சந்திப்பு மீனாட்சிபுரம் சன்னியாசி கிராமத்தை சேர்ந்தவர்கள், முருகானந்தம் - பால்தாய் தம்பதியினர். முருகானந்தம் திரையரங்கு ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். பால்தாய் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களின் மகள் சரோஜா, 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
சரோஜா தனது பட்டப்படிப்பை தொடர அவரது குடும்ப வறுமை பெரும் தடையாக இருந்துள்ளது. இதனால், வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் உதவியால் தனது பட்டப்படிபை தொடர்ந்தவர் தமிழில் பி.லிட், எம்.ஏ. வரை முடித்திருக்கிறார். தொடர்ந்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பல்வேறு தேர்வுகள் எழுதியுள்ளார்.

பல்வேறு தேர்வுகள் எழுதி பயிற்சி எடுத்து கொண்டதன் பேரில் குரூப் 1 தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளார். இதில், முதல் முயற்சியிலேயே 375 மதிப்பெண் பெற்று 169 வது ரேங்கில் வெற்றி பெற்று தற்போது டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். சரோஜாவின் வெற்றியை அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தல் பிறந்தாலும், தனது முன்னேற்றத்திற்கு வறுமை பெரும் தடை என கருதாத சரோஜா, தனது தளராத தன்னம்பிக்கையால் முதல் முயற்சியிலே, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறையில் டிஎஸ்பி ஆக தேர்வாகி பெரும் சாதனை படைத்துள்ளார். சாரோஜாவின் வெற்றியை அவரது குடும்பம் மட்டுமல்லாமல் அந்த சுற்று வட்டாரமே மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.
சாதனை படைக்க வறுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக்காட்டிய சரோஜாவுக்கு, என்டிடிவி சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை: