திங்கள், 24 டிசம்பர், 2018

சீயமங்கலத்தில் ஒரு தீண்டாமை சுவர்? விழுப்புரம் ..உளுந்தூர் பேட்டை .. அருந்ததியர்கள் பயத்தில் உள்ளார்கள்?

Kathiravan Mumbai : மீண்டும் ஓர் சந்தையூர் ?.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலூக்காவிலுள்ள "சீயமங்கலம்"என்ற கிராமத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும் பறையர் ஜாதியினருக்கும் தகராறு.
 அருந்ததியர்கள் ஊரின் மைய பகுதியில் குடியிருப்பதால் பறையர்களுக்கு கௌரவ குறைச்சல் என்று எண்ணுவதாக அருந்ததியர்கள் கூறுகிறார்கள்.
தாம் பயன்டுத்திய பொது பாதை குடிநீர் கைபம்புவை சேதபடுத்தி தீண்டாமை தடுப்பு சுவர் கட்டும் பணியில் பறையர்கள் ஈடுபட்டுவருவதாகவும் .கோவில் மதில் சுவர் என்ற பெயரில் கோவிலை சுற்றி சுவர் எழுப்பி வருவதாகவும் கூறுகிறார்கள்.
இதனால் அருந்ததியர் மக்கள் பொது வீதியில் நடமாட்டம் இல்லாமல் போய்விடும்.
இத்தகைய போக்கு நவீன தீண்டாமையாகும்.
தொடர்ச்சியாக பறையர்களால் விளிம்பு நிலை மக்களான அருந்ததியர் மக்கள் ஜாதி கொடுமைக்கு ஆளாகும்போது மௌனமாக இருப்பதே நமது ஜாதி ஒழிப்பு பேசும் இயங்களின் வாடிக்கையாகி விட்டது .
சேரியில் நிலவும் ஜாதி வெறிக்கு எதிராக பேசுவதுதான் நேர்மையாக இருக்க கூடும்.
இனியாவது சேரி ஜாதிவெறிக்கு எதிராக பேசுவோம்
பாதிக்க்கப்பட்ட மக்களுக்காக ஆதித்தமிழர்பேரவை மட்டுமே தற்போது களத்தில் உள்ளது .

ஜனநாயக சக்திகள் அணி சேர வேண்டும்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்கிராமத்தில் பறையர்களால் தொடர் மிரட்டலால் அருந்ததியர்
மக்கள் பயத்தில் உள்ளார்கள்.

Surya Msw : கடந்த 6 மாதங்களாக போய்கொண்டு இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது.. களத்தில் ஆதிதமிழர் பேரவை இருக்கிறது அவர்கள் தான் முன்னெடுத்து செல்வதாக தகவல்..

கருத்துகள் இல்லை: