செவ்வாய், 25 டிசம்பர், 2018

போகிபீல் பாலம் ..ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ரயில் பாலம் இன்று திறந்து வைக்கப்படுகிறது


தினத்தந்தி  : திப்ருகரா, வாஜ்பாய் பிரதமரமாக இருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக, 1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா அதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த டிசம்பர் 3-ம் தேதி இந்தப் பாலத்தில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது. 4.94 கிலோ மீட்டர் கொண்ட போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும் . 16 ஆண்டுகளுக்கு பிறகு முடிக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்.  4.94கிமீ நீளம்கொண்ட போகி பீல் பாலம் வாகனங்கள்,ரயில் செல்லும் வகையில் இரு அடுக்காக கட்டப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதிமேல்கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலம் நாட்டில் ஆறுகள் மேல் செல்லும் 4-வது பெரிய பாலமாகும்.


5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லையில் மிகப்பெரிய பாலம் கட்டப்படுள்ளதால் தளவாடங்களை விரைவில் கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: