வியாழன், 27 டிசம்பர், 2018

2018 இல் தமிழ் சினிமாவின் 70% வசூலை பெற்ற 18 படங்கள்

மின்னம்பலம் : 2018: வசூல் நாயகன் யார்?தமிழ் சினிமாவில் 2018ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் படங்களில் ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கும் அதிகமாக சம்பளம் கேட்கும், வாங்கும் நடிகர்கள்,
 1. ரஜினிகாந்த்,
2. கமல்,
3. விஜய்,
4. அஜித்,
5.விக்ரம்,
6. சூர்யா,
7. கார்த்தி
 8. தனுஷ்,
9. சிம்பு,
10. சிவகார்த்திகேயன்,
11. ஆர்யா,
12. விஐய்சேதுபதி,
13. விக்ரம் பிரபு
14. கெளதம் கார்த்திக்
 15.அதர்வா,
16. அருண் விஜய்,
 17. அருள்நிதி,
18. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர். இவர்களில்அதிக படங்களில் நடித்த நடிகர் விஐய் சேதுபதி.
இந்த ஆண்டு வெளியான வியாபார முக்கியத்துவம் மிக்க அதிகப் படங்களில் நடித்திருப்பது யார் எனப் பார்ப்போம்.
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் ஆறு படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜுங்கா, 96, செக்கச் சிவந்த வானம், சீதக்காதி ஆகிய ஐந்து படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் பிரபு நடிப்பில் இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை .
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் காலாவும், ஷங்கர் இயக்கத்தில் 2.0வும் வெளியாகின.
தனுஷ் நடிப்பில் வடசென்னை, மாரி 2 ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா, கௌரவ வேடத்தில் நடித்துள்ள கனா ஆகிய படங்கள் வெளியாகின.
ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக், அடங்க மறு ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன.
அதர்வாவும் செம போத ஆகாத, இமைக்கா நொடிகள் என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படமும் சாமி 2 படமும் இந்தாண்டு வெளிவந்தன.
விஷால் நடிப்பில் இரும்புத்திரை மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.
கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம் படம் மட்டுமே வெளிவந்தது. சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது.
விஜய் நடிப்பில் இந்த ஆண்டு சர்கார் மட்டுமே திரைக்கு வந்தது. ஆனால் அந்த படம் தான் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களில் 18 படங்கள் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் 70% வசூலை பெற்ற படங்களாகும். இவை தவிர்த்து குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்ற படங்களும் உண்டு.

கருத்துகள் இல்லை: