சனி, 24 செப்டம்பர், 2016

திபெத்தியர்களுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: இந்தியாவில் வசிக்கும், திபெத்திய வம்சாவளியினருக்கு, 'பாஸ்போர்ட்' வழங்கும்படி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'இந்தியா குடியரசான, 1950, ஜன., 26க்கு பின் பிறந்த அனைத்து திபெத்தியர்களும் இந்திய குடிமக்கள்' என்ற சட்டம், 1955ல் இயற்றப்பட்டது. பின், '1987, ஜூலை, 1க்குள் பிறந்திருக்க வேண்டும்' என, 2003ல், இந்திய குடிமக்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், லோப்சாங் வாங்யால் உள்ளிட்ட, மூன்று பேர், தமக்கு, 'பாஸ்போர்ட்' வழங்க உத்தரவிடக் கோரி, வழக்கு தொடர்ந்தனர்.
விசாரித்த, டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் மூவரும், 1970 முதல், 1992ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிறந்ததாகவும், வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்திய குடிமக்கள் சட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், இந்தியாவில் பிறந்த திபெத்திய வம்சாவளியினரும், இந்திய குடிமக்களே. அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட் அளிக்க, மறுக்க முடியாது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் நாட்டை பார்க்காமல், பிறப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். மனுதாரர்கள் மூவரும், பிறப்பினால், இந்திய குடிமக்கள். எனவே, நான்கு வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: