முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.
9. 30 மணி: முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.
10. 15 : ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடன் சசிகலா இருக்கிறார். சிறிது நேரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் வருகிறார்.
10.30 : கிரீம்ஸ் ரோடு சாலையில் அதிகளவில் காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.
1. 00: அப்போலோ மருத்துவ நிர்வாகம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடுகிறது.
1.05: முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
1. 30 : கீரிம்ஸ் ரோடு சாலை மூடப்படுகிறது
1. 40 : சைதை துரைசாமி மருத்துவமனைக்கு வருகிறார்.
2.05: முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வருகிறார்.
2.30: அமைச்சர் ஜெயக்குமார் வருகிறார்.
3.00: தலைமைச் செயலாளர் ராம் மோக்ன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.
3.16: சிறிது நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுவிடுவார் என தகவல். கான்வாய் வாகனங்கள் மருத்துவமனை வாசலில் தயாராக இருக்கிறது.
3.45: காலை 7 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தகவல். - மு. நியாஸ் அகமது, ஜோ.ஸ்டாலின், ந.பா. சேதுராமன் | படங்கள் : செந்தில்குமார், குமரகுருபரன், நிவேதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக