எடுத்தப்ப,
‘கடையில விக்கிற வடையோட விலை ஒரு ரூபாயாத்தான் இருக்கணும். எக்காரணம்
கொண்டும் விலையை ஏத்தக்கூடாது’ன்னு தீர்மானிச்சோம். இந்த முடிவுதான்
எங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு.
அன்றிலிருந்து இன்று வரை வடையோட விலையை நாங்க உயர்த்தலை. அதே ஒரு
ரூபாய்தான்.
ஆரம்ப காலகட்டத்துல ஐநூறு வடை வரைக்கும் விக்கும். ஆனால், இன்று ஏழாயிரம் வடை வரைக்கும் விற்பனை ஆகுது. நாங்க குடும்பத்தோடு உழைக்கிறதால, எங்களால குறைஞ்ச விலைக்கு வடையை விற்பனை செய்ய முடியுது. ஒரு நாளுக்கு 25 கிலோ கடலை பருப்பு வாங்குறோம். மொத்த விற்பனைக் கடையில் பொருட்களை மூட்டையாக வாங்குவதால், குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அதேபோல, எண்ணையையும் மொத்தமா கொள்முதல் செய்றோம்.
நாங்க இந்தத் தொழிலுக்கு
வந்தப்ப ஒரு கிலோ உளுந்து 25 ரூபாய். கடலைப்பருப்பு 10 ரூபாயா இருந்தது.
இப்ப உளுந்து 140 ரூபா; கடலைப்பருப்பு 48 ரூபா. அதனால வடையோட சைஸைக்
கொஞ்சம் சின்னதாக்கிட்டோமே தவிர, நாங்க விலையை உயர்த்தலை. ஒரு ரூபாய்க்கு
தேங்காய் சட்னியுடன் வடை கிடைக்கிறதால, பள்ளிக் குழந்தைங்க ஐந்து
ரூபாய்க்கு வயிறார வடையை சாப்பிட்டுப் போறாங்க.
பள்ளிக்
குழந்தைகளை கூட்டிகிட்டு போகவரும் பெற்றோரும் வீட்டுக்கு வடையை
வாங்கிட்டுப் போறாங்க. பக்கத்தில் உள்ள இடங்களில் இருந்து எங்கக் கடைக்கு
வடை சாப்பிடு வதற்காகவே நிறைய பேர் வர்றாங்க. தவிர, கல்யாண ஆர்டரும்
அடிக்கடி வரும். அவங்களுக்கும் நிறைவா வடை செஞ்சு தர்றோம்..
தினமும்
காலையில, 5 மணி முதல் 8 மணி வரையிலும் மொத்த வியாபாரத்துக்கு வடை செஞ்சு
கொடுக்கிறோம். அதாவது, வேறு டீ கடைகளைச் சேர்ந்தவங்க எங்க கடைக்கு வந்து
வடையை வாங்கிட்டு போவாங்க. அவங்க அதை 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை
விற்கிறாங்க. காலையில 8 மணிக்கு பிறகு எங்க வியாபாரம் சூடு பிடிக்க
ஆரம்பிக்கும். அதுக்குப் பிறகு இரவு 8 மணி வரைக்கும் கடையில் விற்பனை
நடக்கும். தரத்தில் நாங்க எப்பவுமே சமரசம் செஞ்சுகிட்டது கிடையாது.
நாங்க
இந்தத் தொழிலை தொடங்கி னப்பவே எங்க கடையில நல்ல லாபம் கிடைச்சுது. அப்ப
கிடைச்ச லாபம் இப்பவும் கிடைக்குது. அதுக்கு காரணம், இப்ப விற்பனை
அதிகமானதுதான்.
உணவுப் பொருளைத் தரமாகவும்
ருசியாகவும் கொடுக்கிறதால, எல்லாரும் விரும்பி ஏத்துப்பாங்க என்பதை
அனுபவமாக உணர்ந்து இருக்கோம். புதுசா தொழில் பண்ணனும்னு நினைக்கிறவங்க,
கடுமையாக உழைக்கணும். செய்ய நினைக்கும் தொழிலைப் பத்தி முழுமையாகத்
தெரிஞ்சுகிட்டு உழைக்கணும். யாருக்காவும் எதுக்காகவும் தரத்துல சமரசம்
செஞ்சிக்கவே கூடாது” என்று புதிய தொழில்முனைவோருக்கு டிப்ஸ் வேறு தந்தார்.
ஆசிரியையாக
பணியாற்றும் அவரது மனைவி ஆரோக்கிய அமுதா, “ஆரம்ப காலத்துல ‘வடைக்
கடைக்காரரோட மனைவி’ என்று எல்லோரும் சொல்லும்போது எனக்குக் கூச்சமாக
இருந்துச்சு. ஆனா, என் கணவர் சுயமாக உழைத்து அதிகமான வாடிக்கையாளர்களை
வைத்திருக்கிறார்.
இப்ப
என்னைப் பலரும், ‘ஒரு ரூபாய் வடைக்காரரின் மனைவி’ என்று சொல்லும்போது
மனதில் உற்சாகமும் பெருமிதமும் ஏற்படுகிறது” என்கிறார், பெருமை பொங்க.
ராபின்ஸ்டனால் ஒரு ரூபாயிலேயே தரமாக வடை தரமுடிகிறது எனில், அதிக விலை வைத்து விற்கப்படும் வடையில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை வாசகர்களே கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளலாம். தரமும், ருசியும், நேர்மையும் இருந்தால், வடைக் கடை உங்களைச் சிறப்பாக வாழ வைக்கும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்!<படங்கள்: எல்.ராஜேந்திரன் விகடன்.com
ஆரம்ப காலகட்டத்துல ஐநூறு வடை வரைக்கும் விக்கும். ஆனால், இன்று ஏழாயிரம் வடை வரைக்கும் விற்பனை ஆகுது. நாங்க குடும்பத்தோடு உழைக்கிறதால, எங்களால குறைஞ்ச விலைக்கு வடையை விற்பனை செய்ய முடியுது. ஒரு நாளுக்கு 25 கிலோ கடலை பருப்பு வாங்குறோம். மொத்த விற்பனைக் கடையில் பொருட்களை மூட்டையாக வாங்குவதால், குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அதேபோல, எண்ணையையும் மொத்தமா கொள்முதல் செய்றோம்.
ராபின்ஸ்டனால் ஒரு ரூபாயிலேயே தரமாக வடை தரமுடிகிறது எனில், அதிக விலை வைத்து விற்கப்படும் வடையில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை வாசகர்களே கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளலாம். தரமும், ருசியும், நேர்மையும் இருந்தால், வடைக் கடை உங்களைச் சிறப்பாக வாழ வைக்கும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்!<படங்கள்: எல்.ராஜேந்திரன் விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக