ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

கர்நாடக கலவரத்துக்கு காரணம் இந்து அமைப்புகளா? விசாரணை!


மின்னம்பலம்.காம் காவிரியில் தண்ணீர் விடச் சொல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி பெங்களூரு, மைசூர், மாண்டியாவில் மிகப்பெரிய கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த கலவரங்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. மிகக்குறைந்த நேரத்தில் எப்படி இத்தனை பேருந்துகளை எரிக்க முடிந்தது? முதல் தீர்ப்பு வந்தபோது நடக்காத கலவரம், இரண்டாவது தீர்ப்பின்போது ஏன் நடந்தது? இதுவரை தமிழகத்துக்கு எதிராக காவிரி விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்ட சக்திகளுக்கு அப்பால் சில புதிய சக்திகள் இந்த கலவரங்களின் பின்னணியில் இருக்கலாம் என்பதை சில சிசிடிவி காட்சிகள் மூலம் தெளிவாகத் தெரிந்திருக்கும் நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், “காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தமக்கு முழுமையாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.

எனினும், காவிரி பிரச்னையால் கர்நாடகாவில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு, ஒரு அமைப்போ அல்லது அந்த அமைப்பைச் சேர்ந்த தனி நபர்களோ காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பரமேஸ்வர் குறிப்பிட்டார். எனினும், இது பற்றி தீவிர விசாரணைக்குப் பின்னரே இறுதி முடிவுக்கு வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பரமேஸ்வர் பெயர் குறிப்பிடாமல் ஒரு அமைப்பு என்று தெரிவித்தாலும் கட்சியின் உயர்மட்டக் கமிட்டிக் கூட்டத்திலும், காவல்துறை அதிகாரிகளுடனான கூட்டத்திலும் பகிரப்பட்ட பல கருத்துகள் சில இந்துத்துவ அமைப்புகளுக்கு இந்தக் கலவரங்களில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிப்பதால் விசாரணை அந்தக் கோணத்திலும் நடக்கிறது.

கருத்துகள் இல்லை: