
வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த இமாம் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். நியூயார்க்கில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பெயர் மெüலானா அகோன்ஜி (55). அவரும் தாராவுத்தீன் (64) என்பவரும் நியூயார்க் நகரில் உள்ள மசூதியில் சனிக்கிழமை பிற்பகல் தொழுகை முடிந்த பிறகு, வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்புறமாக வந்த மர்ம நபர் அந்த இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அந்த மர்ம நபர், மிக அருகிலிருந்து அவர்களை சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் அப்பகுதிக்கு விரைந்த பொதுமக்கள் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மெüலானா அகோன்ஜி உயிரிழந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த மற்றொரு நபரான தாராவுத்தீன் உயிருக்குப் போராடி வருகிறார். இது மதவாத தாக்குதல் என்று கூறுவதற்கான காரணம் எதுவும் தற்போதைக்கு இல்லை. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு கண்காணிப்பு கேமராக்களில் இமாமை சுட்ட நபரின் படம் பதிவாகியிருக்கிறது.
போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலைகாரன் விரைவில் பிடிபடுவது உறுதி என்று நகர காவல் துணைத் தலைவர் ஹென்ரி சாட்னர் கூறினார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த மெüலானா அகோன்ஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான மனப்பான்மை அமெரிக்காவில்
அதிகரித்து வருவதாகவும், பட்டப்பகலில் படுகொலை நிகழ்ந்தது அச்சத்தை
ஏற்படுத்துவதாகவும் கூறி ஏராளமான முஸ்லிம்கள் பொது இடத்தில் கூடி கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக