புதன், 17 ஆகஸ்ட், 2016

அதிமுக பிலால் பேட்டி: சசிகலா புஷ்பா விவகாரத்தில் பொய்யாக கதைகள் கட்டி... வேதனையில் உள்ளேன்..

ஜூனியர் விகடன் : சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சசிகலா புஷ்பாவை தாம் திருமணம் செய்ததாக வெளியான செய்திகள் தவறு என்றும் அவருடன் பேசியே ஓராண்டாகிவிட்டது என்றும் அதிமுக தலைமை நிலையத்தில் பணிபுரிந்து வந்து முன்னாள் ஊழியர் பிலால் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா புஷ்பா விவகாரத்தில் பிலால் என்ற அதிமுக தலைமை நிலைய முன்னாள் ஊழியர் பெயரும் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. பிலாலுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியாகி இருந்தன.
சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த பணிப்பெண்கள் பானுமதியும் ஜான்சிராணியும் பிலால் குறித்து நிறையவே தகவல்களைத் தெரிவித்திருந்தனர். சசிகலா புஷ்பாவும் பிலாலும் திருமணம் செய்து கொண்டதாகவும் இதை தட்டிக் கேட்ட கணவர் லிங்கேஸ்வரனிடம், நான் அப்படித்தான் இருப்பேன் என சசிகலா புஷ்பா மிரட்டியதாகவும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு பிலால் நடந்தது என்ன என்பது தொடர்பாக விளக்கமான பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சசிகலா புஷ்பா அறிமுகம் ஆனது சில ஆண்டுகளுக்கு முன்புதான். இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநில துணைச் செயலாளராக அவர் பதவிக்கு வந்தபோது, ஒரு நாள் என்னிடம் வந்து புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வேண்டும் என்று பணம் கட்டினார்.


கேக் ஊட்டும் போட்டோ எடுத்தது 3 ஆண்டுகளுக்கு முன்புதான். அவருடைய பிறந்த நாள் அன்று என்னை அழைத்து இருந்தார். நான் காலையில் போகமுடியாமல், அலுவலக வேலை முடித்து இரவுதான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுக்குப் போனநேரத்தில் அவரது குடும்பத்தினர் அனைவருமே வீட்டில் இருந்தார்கள், நான் வந்தவுடன், எனக்கு அவர் கேக் ஊட்டினார். அப்போது அவருடைய கணவர், அவரது அம்மா எல்லோரும் பக்கத்தில்தான் இருந்தார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள போட்டோவில் பக்கத்தில் நின்ற அனைவரையும் கட் செய்துவிட் டார்கள். அப்படி கட் செய்து போட்டோவை வெளியிடவேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. 
நான் அவருடன் பேசியே ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் எம்.பி ஆனதற்குப் பின்னால் அவருடன் நான் பேசவே இல்லை. சந்திக்கவும் இல்லை. ஆனால் திடீரென்று இப்போது அவருடன் என்னைச் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்.
சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த அந்த 2 பெண்களையும் யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். யாரோ சொல்லிக் கொடுத்துத்தான் அந்தப் பிள்ளைகள் பேசுகிறார்கள். என் குடும்பத்திலேயும் எனக்குப் பிரச்னை. நான் வெளியே தலைகாட்ட முடியாமல் வேதனையில் இருக்கிறேன்.

நானும் உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்தேன். அதன் பிறகு, கட்சி அலுவலகம் வரும்போதெல்லாம் என்னிடம் வந்து பேசுவார். அந்தப் பழக்கத்தில் அவரது கணவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தூத்துக்குடி மேயர் ஆனதும் சென்னை வரும்போது மட்டும் பேசுவார். கட்சி தொடர்பாக உதவிகள் தேவைப் பட்டால் கேட்பார். செய்து கொடுப்பேன். இதில் என்ன தவறு?
நான் ஆயிரம் ஆண்களுக்கு உதவிகள் செய்துள்ளேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு நட்பு ரீதியாக உதவி செய்ததை வைத்து இன்று என்னை இவ்வளவு கேவலப்படுத்துகின்றனர். அவர் குடும்பத்துக்கு நான் நன்றாக அறிமுகம் ஆனவன். அனைவரும் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். அவர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். என்மீது அவர் குடும்பத்தினர் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். எனக்குத் திருமணமாகி, குடும்பம் உள்ளது. அவருக்கும் குடும்பம் உள்ளது


Read more at://tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: