சனி, 20 ஆகஸ்ட், 2016

சவூதிக்கு சனியன் பிடிக்கிறது ? ஒசாமா மகன் ஹம்சா : சண்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா ?

அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற சவுதி அரசை தூக்கியெறிங்கள் என்று அந்நாட்டு இளைஞர்களை வலியுறுத்தியிருக்கிறார் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன்' என்று பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. தேதியிடப்படாத ஒலிப்பதிவு செய்தி ஒன்றில், ‘அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அல்கெய்தாவில் இணைந்து பயிற்சி பெற்று அனுபவத்தை பெற வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட முடியும்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார். 2009இல் ஏமன் மற்றும் சவுதியில் அல்கெய்தா இயக்கம் தன் நெட்வொர்கை விரிவுப்படுத்தியதாக அமெரிக்கா குறிப்பிடுகிறது.
2011இல் பாகிஸ்தானில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கெய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படையினர் கொன்றனர். இந்நிலையில் ஒசாமாவின் பிரியத்துக்குரிய 23 நிரம்பிய மகன் ஹம்சா, தற்போது அல்கெய்தாவின் மூளையாக இருந்து செயல்படுவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுகிறது. இந்நிலையில் கொல்லப்பட்ட அனைத்து அல்கெய்தா தலைவர்களுக்காக இஸ்லாமிய தேசம் அமெரிக்காவை பழிவாங்கும் என்று சபதமெடுத்திருக்கிறார் ஹம்சா பின்லேடன். மின்னம்பலம் .com

கருத்துகள் இல்லை: