புதன், 17 ஆகஸ்ட், 2016

குஜராத்தில் மீண்டும் தலித்கள் மீது வன்முறை..19 பேர் காயம் . உனா மாநாட்டுக்கு சென்று வந்ததால் தண்டனை

With caste tension seething in this south-western part of Gujarat, 19 people, including three policemen, were injured in clashes last evening and hospitalized.
குஜராத் மாநிலம் உனாவில் மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய தலித்களை மற்றொரு பிரிவினர் வழிமறித்துத் தாக்கியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் தலித்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலும் தலித்துகள் மீதான தொடர் வன்முறைகளில் இருந்தும், சாதிய பாகுபாடுகளில் இருந்தும் சுதந்திரம் தேவை என்ற கோரிக்கைகளுடன் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனாவில் மாநாடு நடைபெற்றது. தலித் அஸ்மிதா யாத்ரா என்ற பெயரில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அகமதாபாத்தில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. 400 கி.மீ. தூரம் இந்த யாத்திரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பேரணிக்கு உனாவில் மட்டுமில்லாமல், குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும்பரவலாக ஆதரவு பெருகியது. இஸ்லாமியர்களும் பெரிய அளவில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், குஜராத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் இளைஞரின் தந்தை பாலு சர்வையா, திரைப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்டவர்த்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


தலித்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாநாடு முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்த 20 பேரை சம்தேர் என்னுமிடத்தில் மற்றொரு பிரிவினர் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் பாவ்நகர், ரஜுலா நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தலித்களைத் தாக்கிய வழக்கில் சம்தேரைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தலித்துகளையும் பழங்குடிகளையும் பின் தங்கிய சமூகத்தினைரையும் அரவணைத்து தேச முன்னேற்றம் காண்போம் என பிரதமர் நரேந்திர மோடி தன் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு பேசியது நினைவிருக்கலாம்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: