வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜாக்கி வாசுதேவ் மீது உ.வாசுகி புகார்.. அடியாட்களை வைத்து கொண்டு என்ன விசாரணை நாடகம்? ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் ...


இளம்பெண்களை முன்னே வைத்து அடியாட்களை பின்னே வைத்து.... பணத்தை வீசி அதிகாரிகளையும் ஊடகங்களையும் வாங்கி .. மாமாவேலை பார்த்து அரசிலையும் ..
கோவை, ஆக. 17 – ஈஷா மையத்தின் மீது அடுத்தடுத்த வெளிவரும் புகார்கள் அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் இதனை முழுமையாக வெளிக்கொணர பதவியில் உள்ள நீதிபதியை தலைமையாகக் கொண்டு பல வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு விசாரணை மேற்கொள்ள
வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி வலியுறுத்தினார்.
கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காட்டூர் மில்தொழிலாளர் சங்கத்தில் புதனன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி பங்கேற்று பேசினார். ஈஷா யோகமையத்தின் முறைகேடுகள் குறித்து அவர் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது கட்டிட விதிமுறை மீறல், யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, விதி மீறிய கட்டிடங்களுக்கு தடையில்லா மின்சாரம், கல்வி கட்டணத்தில் முறைகேடு, இளைஞர்களை மூளைச்சலவை செய்வது என அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தன்னுடைய மகள்களை மீட்டுத்தரக்கோரி பேராசிரியர் காமராஜின் புகாரின் மேல் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அந்த பெண்கள் நாங்கள் சுய விருப்பத்தோடே இம்மையத்தில் இருக்கிறோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்திருந்தனர். அதை வைத்தே தீர்ப்பை  சொல்லிருக்க முடியும். ஆனால் ஆசிரம ஆட்கள் வளையம் போல் சுற்றி இருக்க உண்மை மனநிலை சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் வேறு இடத்தில் தங்க வைத்து விசாரிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை. ஆனால் ஈஷா வளாகத்திற்குள்ளே நடத்தியதால், உண்மைகள் மறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து தமிழக அரசு மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய வாசுகி இதுகுறித்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் சட்டமன்றத்தில் விவாதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தொடர்ச்சியாக ஈஷா யோகா மையத்தின் மீதான புகார்கள் வெளிவந்து கொண்டிருப்பதும், இந்த புகாரின் தொடர்ச்சியாக அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.
ஈஷா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள பல கட்டங்கள் விதிமுறை மீறி
கட்டப்பட்டுள்ளதால் 2013 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்பு துறை இவற்றை இடிக்க உத்தரவிட்டும் அவை இன்னும் இடிக்கபடாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த விசயத்தில் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து வருவதாக சந்தேகம் எழுவதாகவும் நடவடிக்கை எடுக்காத
அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஈஷாமையம் மீதான பிரச்சனையில் தமிழக அரசு பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, மனநல மருத்துவர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், கல்வியாளர், குழந்தைகள் நலஉரிமை ஆணையத்தின் உறுப்பினர், சூழலியல் செயல்பாட்டாளர், பெண்கள் நல அமைப்பினர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரித்து முழு உண்மையை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இந்த பிரச்சனைக்கு சில இந்துத்துவா அமைப்புகள் மதச்சாயம் பூசி வருவதாக கூறிய அவர் காருண்யா பல்கலைக்கழகத்தின் விதிமீறல் குறித்தும் நாங்கள் பேசுகிறோம் என்றார்.
ஈஷா போன்ற ஆன்மீக நிறுவனங்கள் பக்தியை வணிகமாக்கி பணம் செய்வதே குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது என்று குற்றம் சாட்டிய வாசுகி ஈஷா குறித்து பல பொதுநல மனுக்கள் நீதிமன்றத்தில் இருப்பதால் தேவை ஏற்பட்டால் அந்த வழக்கோடு மாதர் சங்கமும் தன்னை இணைத்து கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைக்கு செல்லும் என்றார். இந்த பேட்டியின் போது மாதர் சங்கத்தின் மாநில துணை தலைவர் என்.அமிர்தம், மாவட்ட தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். thetamiltimes.com

1 கருத்து:

Unknown சொன்னது…

I used to visit there so many times to dhyanalingam,never found any anti society activities.Instead they are serving well around the villages by medical,rejuvenation and so on.

We are not capable of doing such good things or to support.

At least, Isha is doing , let us not to disturb them,