வெள்ளி, 8 ஏப்ரல், 2016

மோடி : ரிமோட் கன்ட்ரோலை வேறு யாரிடமும் கொடுத்துவிடாதீர்கள்...அசாம் பிரசாரத்தில் அடம்பிடிக்கும் மோடி

அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 65 தொகுதிகளுக்கு கடந்த 4-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக வரும் 11-ம் தேதி 61 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.< அவ்வகையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்தார். ராகா என்ற இடத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மோடி பேசியதாவது:- அசாமில் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. ஒட்டுமொத்த வளர்ச்சிப்பட்டியலில் மாநிலம் கீழ்மட்டத்தில் உள்ளது. தனது 15 ஆண்டு கால ஆட்சியில், தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை நிறுவுவதற்கே தருண் கோகாய் உழைத்து இருக்கிறார்.   இத்தனை வயசுக்கு பெறகும் விளையாட ரிமூட் கன்ட்றோலை கேட்டு அடம் பிடிக்கிராய்ன்ல?  வெளங்கிடும்  பார்த்தாலும் ஒருமாதிரியாதான் தெரியறான்..  


இங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பணிகளே பேசும் என்று கூறியிருக்கிறார். ஆம். நிலக்கரி சுரங்க ஊழலில் ஈடுபட்டவர்களில் 2 பேர் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் சிறைக்கு செல்வார்கள். இதைப் பார்க்கும் போது உண்மையிலேயே பணிகள் பேசுகிறது.

இந்த தேர்தலில் அசாமில் தொங்கு சட்டசபைதான் அமையும் என சில இடங்களில் பேச்சு நிலவுகிறது. ஒரு அரசை பின்னால் இருந்து ஒருவர் இயக்குவதால் எந்த பலனும் ஏற்படாது. எனவே அரசை இயக்கும் ரிமோட் கன்ட்ரோலை வேறு யாரிடமும் கொடுத்து விடாதீர்கள். பா.ஜனதா கூட்டணி 5 ஆண்டுகளும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க எந்த தடைக்கல்லும் இருக்கக்கூடாது. பா.ஜனதா ஆட்சி அமைந்தால் அசாமின் அடையாளத்தையே மாற்றுவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: