வியாழன், 7 ஏப்ரல், 2016

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது

புதிய தமிழகம் கட்சி  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,  இன்று பகல் 12.15 மணிஅளவில் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முதன்மை செயலாளர் துரை முருகன், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, தயாநிதி மாறன் ஆகியோர் உடன் இருந்தனர். கருணாநிதி- கிருஷ்ண சாமி சந்திப்பின்போது தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் இணைவது என்றும், அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்றும் முடிவானது. இது தொடர்பான உடன் பாட்டில் இரு கட்சி தலைவர் களும் கையெழுத்திட்டனர்.


பின்னர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஏற்கனவே கூறியபடி எங்கள் கட்சி இணையும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்றேன்.அதன்படி தி.மு.க. கூட் டணியில் நாங்கள் இணைந்து உள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெறும். கருணாநிதி 6&வது முறையாக முதல்--அமைச்சராக பதவி ஏற்பார்.இவ்வாறு அவர் கூறி னார்
 தினத்தந்தி.காம்

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஓதுக்கீடு திமுக தலைவர் கலைஞரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது என்றும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் உடன்பாடு கையெழுத்தானது. ராஜ்யசபா கோரிக்கை பற்றி சாதகமான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று தெரிகிறது  நக்கீரன்.com

கருத்துகள் இல்லை: