வெள்ளி, 8 ஏப்ரல், 2016

முருகதாஸ் + விஜய் திருடிய குறும்படம் தாகபூமி.......கத்தி


முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து 2014 இல் வெளியான கத்தி படத்திற்கான சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. தஞ்சையைச் சேர்ந்த அன்புஇராசசேகர் என்பவர் இது தன்னுடைய தாகபூமி என்கிற குறும்படத்தை அப்பட்டமாகத் திருடித்தான் முருகதாஸ் கத்தி படத்தை எடுத்தார் என்பதற்கான சாட்சிகளை வெளியிட்டுள்ளார். அப்படம் வெளிவந்த சில நாட்களில் விசயமறிந்து தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கிய அன்புஇராசசேகருக்கு முருகதாஸ் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லையாம். அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை, சந்திக்க முயன்றும் முடியவில்லை என்பதற்குப் பிறகு நீதிமன்றம் போயிருக்கிறார் அன்புராசசேகர். தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் மதுரையில் ஒரு வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது.

கத்தி பட காட்சிகள் திருடப்பட்டவையே! ஆதாரங்கள் இதோ இந்த லிங்கில்! http://bit.ly/1q8zjdG
இதற்கிடையே அவருக்கு ஆதரவாக தஞ்சைவிவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பலர் ஒருங்கிணைந்து முருகதாஸைக் கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து இன்று தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடத்திவருகின்றனர்.
போராட்டத்தின்போது தாகபூமி படத்திலிருந்து தான் கத்தி எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சிகளை வெளியிட்டார்கள்.
அந்த முழுமையான சாட்சிகள் படங்களாக இதோ இந்த லிங்கில்! http://bit.ly/1q8zjdG

கருத்துகள் இல்லை: