சனி, 9 ஏப்ரல், 2016

பீட்டர் அல்போன்ஸ் போர்க்கொடி! வாசன் முடிவு ஏற்றுகொள்ள முடியாது.... தமாகவின் நோக்கம் சிதைக்கபட்டு விட்டது

தமிழ்மாநில காங்கிரஸ் விஜயகாந்த் அணியுடன் சேர்ந்ததை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல் ஏவுமான திரு.பீட்டர் அல்போன்ஸ் அறிவிப்பு. கடந்த சில நாட்களாக வாசனின் திரை மறைவு பேச்சுக்களில் அதிருப்தி உள்ளவராகவே இருந்தார். ஆனாலும் கண்ணியம் கருதி மௌனமாகவே இருந்தார். தமாக தொடங்கப்பட்டதின் நோக்கமே அடியோடு இல்லாமல் போய்விட்டதாக தொலைகாட்சி பேட்டிஒன்றில் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தமாகவின் முக்கியமான தலைவரின் இந்த அதிருப்தி நிச்சயம் உள்ளே ஒரு போராட்டம் வெடித்து உள்ளதையே காட்டுவதாக பலரும் கருதுகிறர்கள
இன்று சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் காங்கிரசில் சேரவேண்டும்.
பாரதீய ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் எப்படி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது?.காந்தியை கொன்ற, காமராஜரை கொல்ல முயற்சித்த பாஜகவுடன் பேச்சுவார்த்தையா? வருகிற 16 ந்தேதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.தி.மு.க காங்கிரஸ் வெற்றிக்கு ஜோதி மணி பாடுபட வேண்டும்.அரவக்குறிச்சி தொகுதியை கேட்கவில்லை என்பது தவறு.சுயேட்சையாக போட்டியிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா, ராகுல் தமிழகம் வருகை தருகின்றனர்.வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ராணுவத்தை வரவழைக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்

கருத்துகள் இல்லை: