ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மென்பொறியாளர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு : காவல்துறை ஆய்வாளர் பணியிடைந ீக்கம்

மென்பொறியாளர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு : காவல்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் சென்னை: சென்னையில் மென்பொறியாளர் உமாமகேஸ்வரி காணாமல் போன வழக்கை விசாரித்த கேளம்பாக்கம் காவல்துறை ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் உமாமகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் நேற்று கேளம்பாக்கம் அருகே போலீசார் கைப்பற்றினர். எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர். ்நிலையில் உமாமகேஸ்வரி காணாமல் போனதாக அவர்களது பெற்றோர் புகார் அளித்த போது கேளம்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் சுப்பையா முறையாக விசாரணை நடத்தாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உமாமகேஸ்வரியின் உடல் அவர் பணிபுரிந்த அலுவலகம் அருகே கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆய்வாளர் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். கொலையுண்ட உமாமகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீயிட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் dinakaran.com

கருத்துகள் இல்லை: