புதன், 26 பிப்ரவரி, 2014

Chennai IT பெண் ஊழியர் கொலை குற்றவாளிகள் பற்றி சில சந்தேகங்கள் ? கேசை அவசரமாக முடிக்கிறார்களா ?


chennaiengnrFEB250214
அவர்கள் குற்றவாளிகள் என்றால் காவல் துறை இன்னும் கூடுதல் ஆதாரங்களை தர வேண்டும். அவர்களின் முகத்தை மூடி வைத்திருப்பது ஏன்? எல்லா வழக்கிலும் இதுபோல்தான் காவல் துறை குற்றவாளிகள் முகத்தை மூடி வைத்ததா?சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி  கொலை செய்யப்பட்ட வழக்கில்,
அவரின் A.T.M கார்டை திருடி பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்டவர்கள் என்று காவல் துறை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது.
கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம் என்கிறது காவல் துறை.
சிவப்பு கலர் சட்டை மட்டுமே எப்படி கொலைக்கான அடையாளமாக இருக்க முடியும்? அப்படி இருந்தால் அந்த சட்டையை குற்றவாளிகள் அதற்குப் பிறகும் போட்டுக் கொண்டே இருப்பார்களா? பத்திரப் படுத்தி வைத்திருப்பார்களா?

இதேபோல் கடந்த ஆண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று வங்கியின் கேமராவில் பதிவான ‘கட்டம் போட்ட சட்டை’ என்று சாட்சி சொல்லி விசாரணையே இல்லாமல் 5 வட நாட்டு இளைஞர்களை சுட்டுக் கொன்று அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது போலிஸ்.
இன்றைய தினத்தந்தியில்,
கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வாக்குமூலம் விவரம் வருமாறு:
தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.
அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்தோம். நாங்கள் இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப் பிடித்து இழுத்தோம்.
இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம்.
உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13–ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.
போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச்சென்றோம்.’
என்று காவல் துறை தந்த செய்தி வந்திருக்கிறது.
இவர்கள் கொலை செய்யப்பட்டவருக்கு பழக்கமில்லாதவர்கள் போல் தான் இருக்கிறார்கள். அவர்கள் சொல்கிற சம்பவம் அப்படித்தான் அதை பதிகிறது.
ஆனால், ‘அந்தப் பெண்’ என்று சொல்லாமல் ‘உமா மகேஸ்வரி’ என்று ஒவ்வொரு முறையும் நன்கு தெரிந்தவர் பெயரை சொல்வது போல், பெயர் சொல்லியே சொல்கிறார்கள்.
அது எப்படி அவர்களுக்கு அவரின் பெயர் அந்த அளவிற்கு தெரிந்திருக்கிறது?
அது மட்டுமல்ல ‘எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13–ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.’ என்கிறார்கள்.
இந்த வாக்கியத்தில், அவர்கள் திட்டமிட்டு அவருக்காக காத்திருந்ததுபோல்தான் இருக்கிறது.
ஆனால், உமா மகேஸ்வரியோ கொலை நடந்த அன்று வழக்கத்தை விட முன்பாகவே வேலையிலிருந்து அனுமதி கேட்டு சென்றார் என்று இரண்டு நாட்களுக்கு முன் காவல் துறையே சொல்லி உள்ளது.
அவர்கள் குற்றவாளிகள் என்றால் காவல் துறை இன்னும் கூடுதல் ஆதாரங்களை தர வேண்டும். அவர்களின் முகத்தை மூடி வைத்திருப்பது ஏன்? எல்லா வழக்கிலும் இதுபோல்தான் காவல் துறை குற்றவாளிகள் முகத்தை மூடி வைத்ததா?
இது போன்ற சந்தேகங்கள் இல்லாத அளவிற்கு பொது மக்களுககு அதை விளக்க வேண்டும். ஒருபோதும் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது. mathimaran.wordpress.com 

1 கருத்து:

samson சொன்னது…

வட இந்திய தொழிலாளர் படையெடுப்புக்கு பின் தமிழ் நாட்டில் குற்றங்கள் மலிந்துவிட்டது .அங்கே அவர்கள் மாவைஸ்ட்,நக்சல் போன்ற கொள்ளை கூட்ட்டங்களுடன் இருந்தவர்கள் கிரிமினல் பேர்வழிகள் இங்கு வந்து பஞ்சு மிட்டாய்,பாணி பூரி கடைகள் போட்டு நோட்டம் பார்த்து சரியான சமயத்தில் அவர்கள் ஆட்களை கொள்ளையிட அனுப்புகிறார்கள் .உடனே ரயில் விமானம் மூலம் பயணிக்கின்றனர் .கள்ள நோட்டுகள் இவர்கள் மூலமே மாட்ட்ரபடுகிறது ஈவு இறக்கம் இவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது ரயில்வே துறையில் மாபியாக்கள் மூலம் ஏற்கனவே தயார் செய்யபெற்ற OMR விடைகள் மூலம் தமிழக மக்களின் வேலை வாய்ய்ப்பையும் திருடுகின்றனர் .உங்கள் அருகே இருக்கும் ஒரு ரயில் நிலையத்தில் சென்று நீங்கள் விசாரித்தால் மூன்றில் இரண்டு பங்கு இந்திகார நாய்களே பணியில் இருப்பது புலப்படும் நாம் தூங்குவோம்மாக