புதன், 26 பிப்ரவரி, 2014

ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு பணம் திருப்பித் தர முடியாது : ரயில்வே அறிவிப்பு

நாக்பூர் : ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, பின் ரத்து செய்து பயணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு டிக்கெட்டிற்கான பணம் திரும்பித் தர இயலாது என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு திட்டத்தின் கீழ் மார்ச் ஒன்றாம் தேதி முதல், குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, அதில் குறைவானவர்களே பயணம் செய்தாலும் பணம் திரும்பித்தர முடியாது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.மத்திய ரயில்வேயின் மண்டல மூத்த வர்த்தகப்பிரிவு மேலாளர் டாக்டர் சுமந்த் தெய்யுகர் இது குறித்து கூறுகையில், இந்த புதிய நடைமுறையை மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்த அனைத்து ரயில்வே கோட்ட பொது மேலாளர்களுக்கும் இது குறித்த சுற்றறிக்கை பிப்ரவரி 21ம் தேதியே அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.
டிக்கெட்டை ரத்து செய்து விட்டு பயணம் செய்யாதவர்களுக்கும், மொத்தமாக டிக்கெட் பு் செய்து விட்டு அவற்றில் பெரும்பாலபானவற்றை ரத்து செய்து விட்டு குறைந்த அளவிலான நபர்களே பயணம் செய்தாலும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான பணம் திரும்பித்தர மாட்டாது என கணினிமயமாக்கப்பட்ட பணம் திருப்பித் தரும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், முன்பதிவு செய்து விட்டு ஆர்.ஏ.சி.,யில் குறைந்த வசதிகளுடன் பயணம் செய்ய நேர்ந்தாலோ அல்லது ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யாவிட்டாலும், ரயில்கள் வேறு வழியாக மாற்றி விடப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போனாலோ அல்லது பயணிக்க இருக்கை வசதி தரப்படாமல் போனாலோ அல்லது ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலோ அந்த பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான பணம் திரும்பித்தரப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றம் குறித்து தகவல்களை பயணிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு மத்திய ரயில்வே துணையின் தகவல் தரும் முறையின் சாப்ட்வேரில் மாற்றம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிமுறைகள் அனைத்து பணியாளர்களுக்கும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை பொருளாதார துணை இயக்குனர் ரோஹித் குமார் தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் டிக்கெட்டிற்கான பணத்தில் 50 சதவீதம் வரை திருப்பி தரும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.  dinamalar.com

கருத்துகள் இல்லை: