சனி, 1 மார்ச், 2014

India வில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் to Chennai

ஆந்திர மாநிலம், தடாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் அதிகாரப்பூர்வமாக சென்னை
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ்குமார் பன்சாலிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலுக்காக மொத்தம் 4 பெட்டிகளைக் கொண்ட 42 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரேசில் நாட்டை சேர்ந்த அல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பிரேசில் நாட்டில் இருந்து 5 மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு கப்பல் மூலம் வந்துள்ளன. இன்னும்
4 ரயில்கள் ஜூலை மாதத்துக்குள் சென்னை வரவுள்ளன. பிரேசில் நாட்டு நிறுவனம் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிக்காக தனது கிளை நிறுவனத்தை நிறுவி, அங்கு மெட்ரோ ரயில்களை தயாரிக்க தொடங்கியது.
இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டிகள் வியாழக்கிழமை முறைப்படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தடாவில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட மெட்ரோ ரயில் வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தது. இது தொடர்பாக அல்ஸ்டாம் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைவர் ஹென்ரி பாபர்ட் லபார்ஜே, சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் (திட்டம்) ஆர்.ராமநாதன், முதன்மை பொது மேலாளர் (கட்டுமானம்) வி.சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டன dinamani.com/

கருத்துகள் இல்லை: