அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 8.2
சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு சமூகத்தினரிடம், அவர்களது வருமானம் உள்ளிட்ட விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதில், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4 கோடியே 27 லட்சம் அமெரிக்கர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர் எனத் தெரியவந்தது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைப் பொறுத்தவரை 8.2 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர்.
இதே போன்று, அமெரிக்க ஜப்பானியர்களில் 8.2 சதவீதத்தினர், வியத்நாமியர்களில் 14.7 சதவீதத்தினர், கொரியர்களில் 15 சதவீதத்தினர், பிலிப்பின்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த 5.8 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தின் அடிப்படையில் வறுமைக்கோடு வரையறுக்கப்படுகிறது. 2012-ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்துக்கு கீழே இருந்தால், அக்குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக