குடியரசுத்தலைவரால்
கருணை மனு நிராகரிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் சார்பாக,
தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.இவ்வழக்கு
விசாரணைக்கு போது, கர்நாடக அரசின் தரப்பில் வழக்குரைஞர்கள் யாரும்
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மத்திய அரசின் சொலிசிகூட்டர் ஜெனரல் மட்டும்
ஆஜாராகியுள்ளார்.மனுதாக்கல்
செய்யப்பட்டவர்களின் தரப்பில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும்
ஒன்பது ஆண்டுகளாக மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில்
உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் கடந்த இருபது வருடங்களாக தொடந்து
சிறையில் உள்ளனர். தவிர, அதில் இருவருக்கு வயது 60க்கும் மேல் ஆகிவிட்டது
என்று கூறியுள்ளனர்.>ஒன்பது
ஆண்டுகளாக அவர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றாமல் இருப்பதற்கு நாங்கள்
(ஜுடிசியல்) காரணமா? என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர். இல்லை...
ஜனாதிபதியிடம் கருணை மனு நிலுவையில் இருந்தது என்று மனுதாரர்கள் தரப்பு
வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். அதற்க்கு,
எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு வழக்குரைஞர், இவர்கள் கொடும் குற்றம்
செய்துள்ளனர். இவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டக்கூடாது என்று
வாதிட்டுள்ளார்.இரு
தரப்பையும் கேட்ட நீதிபதிகள், வரும் புதன்கிழமை வரை, (20.2.2013) சைமன்,
மாதையன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரையும் தூக்கிலிட
இடைக்காலத்தடை விதித்துள்ளனர்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக