ஒழிமுறி சென்ற வருடத்திற்கான கேரள அரசு சலச்சித்ர அக்காதமி விருதுகளில்
3 விருதுகளை வென்றுள்ளது. மிகச்சிறந்த இரண்டாவது சிறந்த படத்துக்கான
விருது, மிகச்சிறந்த பின்னணி இசைக்கான விருது, மிகச்சிறந்த
உடையலங்காரத்துக்கான விருது
கேரளத்தில் சமீபத்தில் சிறந்த படங்களுக்காக இவ்வளவு அதிகமான படங்கள் போட்டியிட்டதில்லை. போட்டிக்கு ஜூரி பார்த்த படங்கள் கிட்டத்தட்ட எண்பது. அவற்றில் பன்னிரண்டு படங்கள் விருதுக்களின் கடைசிப் பட்டியலில் இருந்தன. ஒழிமுறி சிறந்த படம் [மதுபால்] சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் [லால் ] சிறந்த நடிகை [மல்லிகா] ஆகிய தளங்களிலும் கடைசி மூன்றுபட்டியலில் இருந்தது.
சிறந்த திரைக்கதைக்கான விருது எதிர்பார்க்கப்பட்டாலும் மஞ்சாடிக்குரு படத்துக்காக அஞ்சலிமேனனுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச பெண்கள் திரைவிழாவில் அப்படம் பெற்ற விருது அதற்கு கூடுதல் மதிப்பெண் பெற உதவியது.
சிறந்த நடிகருக்கான விருது ஒழிமுறிக்காக லாலுக்கு அளிக்கப்படும் என்ற பேச்சு உறுதியாகவே இருந்தது. ஆனால் செல்லுலாய்டுக்காக பிரித்விராஜ் அந்த விருதை பெற்றார். டானியலாக அவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் நடிகராக பலபடிகள் லால் முன்னணியில் இருக்கிறார் என்பதே ஊடகங்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது
தனிப்பட்ட முறையில் நான் செல்லுலாய்ட் சிறந்த படமாக விருது பெற்றதை வரவேற்கிறேன்.
அது ஓர் ஆத்மார்த்தமான படம். அழகான படமும் கூட. மேலும் அது திரைமுன்னோடியை கௌரவிக்கிறது. அதற்கு விருதளிப்பதே எல்லாவகையிலும் முறை. மதுபால் கூட அதையே சொன்னார்
எல்லாவகையிலும் முக்கியமான பல படங்கள் சென்ற வருடத்தில் வெளிவந்தன. கடும் போட்டி காரணமாக அவை விருது பெறாமல் போயின. டைமன்ட் நெக்லஸ், ஈ அடுத்த காலத்து, உஸ்தாத் ஓட்டல், தட்டத்தின் மறையத்து , அர்த்தநாரி , சாயில்யம் போன்றவை உதாரணம்.
ஆனால் எதிராபாரமல் கடைசியில் வந்த படமான ஷட்டர் இரு விருதுகளை வென்றது. நெருக்கமான நண்பர்கள் சிலர் உருவாக்கிய நல்ல படங்களுக்கு விருது கிடைக்காமல் போனது வருத்தம்தான்.
எப்படி இருந்தாலும் இவ்வருடம் இத்தனை அற்புதமான படங்கள் வந்து மலையால திரையுலகம் பூத்துநிறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த வருடமும் என்னுடைய சில படங்கள் போட்டியில் இருக்கும்.மோகன்லாலுக்கு இன்னொரு தேசியவிருது என் வழியாகக் கிடைக்குமென்றால் அவரது ரசிகனாக எனக்கு அது ஒர் உச்சம்.jeyamohan.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக