வியாழன், 21 பிப்ரவரி, 2013

நடிகையாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது.

சென்னை, கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.
ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?
மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.
இருவரின் உடல் களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து, வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப் பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதைவிட இழிவானது. (பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்தெறிந்தார்).
(16.2.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது).

கருத்துகள் இல்லை: