திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஜம்மு-காஷ்மீர்,,உலகின் மிக உயரமான ரயில்பாலம்

உலகின் மிக உயரமான ரயில்பாலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2016-ம்ஆண்டு திறக்கப்பட உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரெய்சி மாவட்டத்தில் உள்ள சீனாப் பாலத்தின் குறுக்கே பாராமுல்லா, ஸ்ரீநகரை இணைக்கும் பாலம் ரூ.20ஆயிரம் கோடி மதிப்பில் கட்டும் பணிகள் 2002-ம் ஆண்டு துவங்கின.
இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை தாண்டி தற்போது இந்த பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 2016-ம்ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

இந்த பாலத்தின் மொத்த நீளம் 1.3 கீ.மீ நீளம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்த 359மீ உயரம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த உயரமான ரயில் பாலம், டில்லியில் உள்ள குதுப்மினார் ஸ்தூபியைவிட உயரமானது என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் சோதனை ஓட்டம் நடத்தியப்பின் ரயில்சேவைக்காக இயக்கப்படும்.
இந்த பாலம் திறக்கப்பட்டால் பாராமுல்லா-ஸ்ரீநகர் இடையேயான 326 கி.மீ. ‌தொலைவினை கடக்கும் பயண நேரம் குறையும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: