எந்த மெசேஜ் மக்கள் மத்தியில் போகக்கூடாது என்று தடை கோரினார்களோ, அந்த
மெசேஜ், சும்மா விட்டால் போயிருக்கக்கூடிய மக்களைவிட பல மடங்கு மக்களிடம்
போய் சேர்ந்திருக்கிறது. என்ன கொடுமை சார் இது!
விஸ்வரூபம் படம் கமல் எதிர்பார்த்த மேக்சிமம் வசூலையும் கடந்து வாரிக் கொட்டி கொண்டு இருக்கிறது. சுமார் 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் சூப்பர்-ஹிட் ஆக வேண்டும் என்றால், 150 கோடி வசூல் கிடைக்க வேண்டும் என்று கமல் தமது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். விஸ்வரூபம் படம் அந்த கோட்டை தாண்டிவிட்டது. இன்னமும் தியேட்டர்களில் கணிசமாக கூட்டத்துடன் ஓடிக்கொண்டு உள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளிலும் தொடர்ந்து விஸ்வரூபம் வசூலில் சக்கை போடுகிறது. மலேசியாவில் தற்போதுதான் தடை விலக்கப்பட்டு, திரையிடப்பட்டுள்ளது.< தமிழகத்தில் போடப்பட்ட தடை காரணமாக, அருகில் உள்ள மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எதிர்பார்த்ததை விட அதிக வசூல். பிற மாநில வசூலில் தமிழக ரசிகர்கள் அங்கு சென்று பார்த்ததும் அடக்கம். கனடா, இங்கிலாந்து, அமெரிக்காவில் 4-வது வாரத்தை கடந்தும் இன்னமும் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படவில்லை. தமிழகத்தில், சமீபத்தில் எந்தப் படமும் ஓடாத ஓட்டம் இது. காரணம், நியூ ஈடியன்ஸ், மற்றும் ரிப்பீட்டட் ஆடியன்ஸ். கமல் படம் பார்க்காத, அல்லது தியேட்டர் பக்கமே போகாத பலரையும் படம் பார்க்க வைத்திருக்கிறது, படத்துக்கு போடப்பட்ட தடை. அதைவிட, ‘ஆர்வக்கோளாறு’ ரசிகர்கள், தியேட்டரில் படம் பார்த்து… அதில் என்ன காட்சிகள் வெட்டப்பட்டன என்பதை பார்க்க டி.வி.டி. வாங்கிப் பார்த்து… அதை எப்படி கட் பண்ணியிருக்கிறார்கள் என்று டபுள் செக் பண்ண மீண்டும் ஒரு தடவை தியேட்டரில் பார்த்து… பிய்த்துக்கொண்டு ஓடுகிறது படம்! எந்த மெசேஜ் மக்கள் மத்தியில் போகக்கூடாது என்று தடை கோரினார்களோ, அந்த மெசேஜ், சும்மா விட்டால் போயிருக்கக்கூடிய மக்களைவிட பல மடங்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. என்ன கொடுமை சார் இது! தடைக்கு ஆதரவு கேட்டீங்க.. தடை கிடைத்தது! காட்சிகளை வெட்ட வேண்டும் என்று கேட்டீங்க.. வெட்டு கிடைத்தது!! இவ்வளவும் கேட்டீங்களே.. தடை செய்தால் என்னாகும் என்று யாரிடமாவது அட்வைஸ் கேட்டீங்களா?< சில தினங்களுக்கு முன் விஸ்வரூபம் வசூல் 120 கோடியை எட்டிவிட்டது என்பதை கமல் ஒப்புக்கொண்டிருந்தார். இன்றைய நிலையில், 150 கோடி என்ற கோட்டை கடந்துவிட்டது. 150 கோடி வரை வந்தாலே சூப்பர் ஹிட் லாபம். அதற்குமேல் வருவது, பம்பர் பரிசு! பெரு வெற்றிக்கு உதவிய 24 அமைப்புகளுக்கும் தலா 1 கோடி, தமிழக அரசுக்கு 2 கோடி நல்லெண்ண அடிப்படையில் கொடுத்தால்கூட, இது செம லாபம்! viruviruppu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக