ஷூட்டிங் ஸ்பாட், ஹீரோயின் போட்டோ ஷூட் போன்றவையெல்லாம் ரகசியமாகவே வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பில்லா படத்தின் சில படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகின. படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் போல படக்குழு தான் வெளியிட்டிருப்பார்கள் என அவற்றை பகிர்ந்தும், மொபைல்களிலும் ஏற்றிக் கொண்டனர்.
படங்களை இண்டர்நெட்டில் பார்த்த படக்குழுவினரே அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தங்கள் தரப்பில் யாரும் இந்த படங்களை வெளியிடவில்லை எனவும் வேறு யாரோ தான் இதை செய்திருப்பார்கள் எனவும் கூறுகின்றனர்.
இதை கேள்விப்பட்ட அஜீத், சக்ரி டொலட்டி உட்பட படக்குழுவினர் அனைவரும் அப்சட் ஆகிவிட்டார்களாம்.
“பில்லாவே பெரிய திருடன். பில்லா கிட்டயே திருட்டா?”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக