செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

இனிக்க இனிக்கப் பேசி தமிழக மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள்-ராமதாஸ்

Ramadossம்ம்ம் எவ்வளவுதான் ராமதாசு இனிக்க இனிக்க பேசினாலும் இந்த முறை எந்த கூட்டணியிலும் சிங்கிள் டிஜிட் சீட்டுக்கள்தான் கிடைக்கும்
 

திருச்சி: திமுக இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். இந்தி எதிர்ப்பு பேரலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழை வளர்ப்பதற்கு இதுவரை உறுப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் 6 ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் மத்திய அரசுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. ஆனால் மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.திருச்சியில் இன்று பாமகவின் புதிய அரசில் புதிய நம்பிக்கை என்ற நூலை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

45 ஆண்டுகாலமாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. அதை நாங்கள் பட்டியலிட்டு இந்த அறிக்கையில் காட்டியுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளோம்.

திமுக இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். இந்தி எதிர்ப்பு பேரலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள். தமிழை வளர்ப்பதற்கு இதுவரை உறுப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் 6 ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் மத்திய அரசுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. ஆனால் மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தமிழக அரசு அங்கு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று அவர்கள் சொல்லத் தேவையில்லை. அதனை அப்துல் கலாம் சொல்லிவிட்டார். அந்த நிபுணர் குழு மக்களையும், எதிர்ப்புக் குழுவினரையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும். அச்சத்தைப் போக்க வேண்டும். தமிழக அரசின் இந்நடவடிக்கை சரியானது அல்ல. முதல்வர் அங்கு நேரடியாக சென்று அந்த மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

2016ல், பாமக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் 120 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.

அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெற தீவிர கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். இதுவரை கூட்டணி வைத்ததற்கு வருத்தப்படுகிறோம் என்றார்

கருத்துகள் இல்லை: