சனி, 24 டிசம்பர், 2011

ஸ்டாலினுக்கு இதய மருத்துவ பரிசோதனை

சென்னை, டிச. 23: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இதய ரத்தக் குழாய் அடைப்பைக் கண்டறியும் "ஆஞ்சியோ' பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.  இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:-  ""மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) பொது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றார். "ஆஞ்சியோ' பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு எந்தவிதக் குறைபாடும் இல்லையென்று டாக்டர்கள் தெரிவித்தனர்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சனிக்கிழமை (டிசம்பர் 24) காலை வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நுரையீரலில் கட்டி: நுரையீரலில் ஏற்பட்டுள்ள மிகச் சிறிய கட்டிக்கு சிகிச்சை பெற ஸ்டாலின் 6 மாதத்துக்கு ஒருமுறை லண்டன் சென்று வருகிறார். கடைசியாக கடந்த செப்டம்பர் 4-ம் தேதியன்று மனைவி துர்காவுடன் அவர் லண்டன் சென்று பரிசோதனைகள் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.  திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனைக்குச் சென்று மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தா

கருத்துகள் இல்லை: