வெள்ளி, 23 டிசம்பர், 2011

கேரள MPக்களுக்கு அமைதியாக இருக்குமாறு சோனியா அட்வைஸ்

டெல்லி: முல்லைப் பெரியாறு பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க பிரதமர் மனமோகன் சிங் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே இரு மாநில மக்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
சோனியா காந்தியை நேற்று கேரளாவைச் சேர்ந்த பி.டி.தாமஸ், அன்டோ அந்தோணி, ஜோஸ் கே.மணி, வேணுகோபால், தனபாலன் ஆகிய எம்.பிக்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களிடம் பேசிய சோனியா, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க மத்திய அரசும், பிரதமரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் இரு மாநில மக்களும் நல்லுறவைக் கெடுக்கும்வகையிலான காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதுவரை சோனியா காந்தியை தமிழக எம்.பிக்கள் யாரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக சந்தித்துப் பேசியதாக தெரியவில்லை. ஆனால் கேரள எம்.பிக்கள் முதல் ஆளாகப் போய் பார்த்து பேசி விட்டு வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: