வெள்ளி, 23 டிசம்பர், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, தேசிய பொது நூலகமாக மாற்ற வழக்கறிஞர் பிரபாகரன் மனு!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தேசிய பொது நூலகமாக ஏன் அறிவிக்கக் கூடாது என்ற பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் என்றும் அதனை தேசிய பொது நூலகமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், இந்த நூலகம் தெற்காசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் என்பதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தேசிய பொது நூலகம் என்ற வரையறைக்குள் இந்த நூலகம் கொண்டுவரப்பட தகுதியானது என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இக்பாலும் நீதிபதி சிவஞானமும், மத்திய அரசின் வழக்கறிஞர் நான்கு வாரங்களில் இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டார்கள். ஜனவரி 19ந் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: