புதன், 14 செப்டம்பர், 2011

வடக்கிற்கு தமிழ் பொலிஸார் அவசியம் - பிளேக் வலியுறுத்தல்


வடக்கில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துமாறும் அவ்வாறு ஈடுபடுத்தினால் இராணுவத்தினரது தேவைப்பாடு நீடிக்காது எனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் மனித உரிமையின் நிலைப்பாடு குறித்தும் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வளித்தல் குறித்து தான் கவனத்தில் கொண்டதுடன் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்தும் தான் கவனத்தில் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனம்தெரியாத ஆயுதக் குழுக்கள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவற்றினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கு வாழ் மக்கள் மர்ம மனிதன் நிலைகுறித்து தனக்கு தெரிவித்ததாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: