புதன், 14 செப்டம்பர், 2011

அமெரிக்கா ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே விரும்புகிறது?

வாஷிங்டன்: வரும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது.

இதில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 2014-ம் ஆண்டு பிரதமர் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.

பிரதமர் பதவிக்கான பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் மிக முக்கியமானவராக மோடி உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச் சிறந்த நிர்வாகியாக அவர் உருவெடுத்துள்ளதால் அந்தப் போட்டிக்கு தானாகவே அவரது பெயரும் வந்து நின்று விட்டது.

அதே சமயம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பிரதமர் தேர்தலில் நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. ராகுலும் மோடிக்கு சலைத்தவர் இல்லை," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியை விட மோடிக்கு பிரதமராகும் தகுதி அதிகம் இருப்பதாக அமெரிக்கா கருதுவது போல இந்த அறிக்கை உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: