வெள்ளி, 16 செப்டம்பர், 2011

செக்ஸ், காதல் பாடத்தை கட்டாயமாக்கிய சீனா

Chinese Students
பீஜிங்: இந்த மாதம் முதல் சீனாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் செக்ஸ் மற்றும் காதல் பாடங்களை உள்ளடக்கிய உளவியல் படிப்பு கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.

சீனாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இந்த மாதம் முதல் செக்ஸ் மற்றும் காதல் பாடங்களைக் கொண்ட உளவியல் படிப்பு கட்டாயப் பாடமாகிறது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் மனநலம் குறித்த பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே உளவியல் ரீதியான அறிவுரைகளைப் பெறும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் தான் உளவியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடத்தில் 7 பிரிவுகள் உள்ளன. மன அழுத்தம், வாழ்கையில் ஏற்படும் விரக்தியை எவ்வாறு எதிர்கொண்டு மீள்வது என்பது பற்றியும், செக்ஸ், காதல் பற்றியும் இந்த பாடத்தில் உள்ளது என்றார்.

இந்த பாடத்தை கட்டாயமாக்கியதற்கு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உளவியல் பாடம் சுத்த போர் என்று பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் வாங் கேபெய் தெரிவித்துள்ளார். ஹீ பாங் என்ற மாணவரும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் அறிவாற்றல் கல்லூரியின் துணை டீன் சாங் பியாஓ கூறுகையில், இந்த உளவியல் பாடம் நடுநிலை மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். நடுநிலைப் பள்ளியில் இருந்து செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். அது தான் செக்ஸ் கல்வி படிக்க உகந்த பருவம் என்றார்.

கருத்துகள் இல்லை: