வியாழன், 23 ஜூன், 2011

Saudi 13 வருடம் சம்பளம் வழங்கப்படாத இலங்கைப் பணிப்பெண்


13 வருடம் சம்பளம் வழங்கப்படாத இலங்கைப் பணிப்பெண்சவுதி அரேபியாவில் 13 வருடங்கள் ஊதியம் வழங்காது வேலையில் அமர்த்தப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் குறித்து ஜஷான் ஆளுனர் சபைக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இவருக்கு சுமார் 60 ஆயிரம் ரியால் சம்பள இருப்பு வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும், அதனை வழங்கக்கூடிய நிலையில் தான் இல்லை எனவும் குறித்ம பெண்ணின் வேலை வழங்குனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேலை வழங்குனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேலை வழங்குனர் சம்பளம் வழங்கும் வரை பணிப்பெண் சமூக பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திராணி மல்லிகா ஹெட்டியாராட்சி என்ற 45 வயதுடைய குறித்த பெண்ணுக்கு 20 வயதில் அங்கவீனம் உற்ற ஒரு மகனும் 19 வயதில் ஒரு மகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 13 வருடங்கள் தனது மனைவிடம் இருந்து தகவல் ஏதும் இல்லாததால் அவர் இறந்திருக்கக்கூடும் என தான் எண்ணியதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனது மனைவி நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: